உயிர் 19

800 67 22
                                    

ஷிவாணி pov:

    காலையில தூக்கம் கலஞ்சு லைட்டா கண்ணத் திறந்தேன்.....நேத்து மாமாவ பத்தி நினைச்சிட்டே படுத்துட்டு இருந்ததுல நான் எப்ப தூங்குனேன்னு தெரியல....சிரிச்சிட்டே லைட்டா சைட்ல திரும்புனேன்....அங்க சேர்ல மாமா உக்கார்ந்து என்னையவே பாத்துட்டு இருந்தாரு...‌டக்குன்னு அவர பார்க்கவும் நான் பெட்ல இருத்து கீழ விழுந்துட்டேன்.....மாமா என்னைய பாத்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு....

"மாமா இங்க என்ன பண்ணுறிங்க....."னு கேட்டேன்.....

"ம்ம் அதுவா....நேத்து நான் உன்னைய ஒன்னு கேட்டேன் ஆனா நீ பதில் சொல்லாம வெட்கப்பட்டுட்டே ஓடிட்ட....அதான் நீ முழிச்ச உடனே கேட்குறதுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்குறேன் சரி சீக்கிரம் சொல்லு...உன்னோட பதில எதிர்பாத்துட்டு இருக்குறேன்...."

"என்ன பதில் மாமா எனக்கு என்ன கேட்குறிங்கன்னு புரியல....."னு சொன்னேன்...
அவரு மெதுவா என் பக்கத்துல வந்து உக்காந்தாரு....
என்னையவே கொஞ்ச நேரம் பாத்துட்டே இருந்தாரு...‌

"மாமா என்னாச்சு ஏன் அப்புடி பாக்குறிங்க...."

"ம்ம் ஒன்னும் இல்லை.... நான் உன்கிட்ட நேத்து கல்யாணம் பண்ணிக்காமான்னு கேட்டனே அது விக்கல் நிக்குறதுக்காக மட்டும் கேட்கல....நான் அதை நிஜமாவேதான் கேட்டேன்....

சரி இப்ப சொல்லு உனக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா...என்னோட என் வாழ்க்கை முழுசும் என்னோட மனைவியா இருக்க சம்மதமா....."னு கேட்டாரு

நேத்து மாமா விளையாட்டுக்கு கேட்டாருன்னு நினைச்சேன்...ஆனா அவரு சீரியஸா இருப்பாருன்னு நினைக்கல...திடிர்ணு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கவும் எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல....

நான் கொஞ்ச நேரம் என்ன சொல்லுறதுன்னு தெரியாம அமைதியா இருந்தேன்.‌...

"பரவால்ல நீ என்ன நினைச்சாலும் அதை சொல்லு நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்...."னு மாமா சொன்னாரு

எனதுயிரே ❤️❤️ ❤️Where stories live. Discover now