சமூகவிலங்கு (Social Animal)

20 0 0
                                    

‪சமூகத்தின் அக்கறைகருத்துக்களும்‬
விமர்சனச் சொல்லாடல்களும் என்னளவில் வெறும் விம்பங்களே!

மனித விலங்கின் சிந்தனை ஆங்கிரமிப்புகள் இன்று எல்லையற்றதாகிப் போய்விட்டது!

உணர்ச்சித் தூண்டல்களும் அதற்கான கால்வாய்களும் மலிந்துப் போய்கிடக்கும் காலத்தில் நீதி என்பது அஸ்தமிக்கும் சூரியன் தான்!

கட்டுபாடுகள் மற்றும் கலாச்சாரம் என்பவை சுதந்திரத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடும் வேளை மனிதத்துவம் அற்றுப் போவதாகவே நான் கருதுகிறேன்!

என்னளவில் இன்று வாழும் பெரும்பாலன நியாயவாதிகள் வெறும் சந்தர்ப்பவாதிகள்தான்!

சராசரி மனிதன் இன்று எழுந்து தூக்கம் செல்லும் வரை இன்று பார்த்து கேட்க கூடிய விஷயம் 90% மனிதத்துவத்திற்கு அப்பாற்பட்டவையே!

"மனதின் தர்க்கத்திற்கு பலியாகும் விதம் கேட்பவை பார்பவைகள் பறைசாற்ற, உள்ளம் ஊமையாகிக் குமையும் வேளை சந்தர்ப்பங்கள் சொல்லிடும் உண்மையில் நீ யார் என்று"

சமூக அக்கிரமங்கள் பொற்காலத்திலும் நடந்தேறின இருப்பினும் அதற்கான பின்னூட்டல்களும் விபரனங்களும் காதும் காது வைத்தாற் போல் நடந்தேறின!

அகலிகை, சீதை, ராமன் என்ற பாத்திரங்கள் மாத்திரமே ஊடக அடையாளம் பெற்றன!

அட்டை படத்தில் அங்கமங்கமாய் பெண்ணுரிமை வென்று! அடக்கிவைக்கும் உணர்ச்சிக்கு தீனி போட்டு எங்கெங்கானத படி நீக்கமற நட்பு என்று சொல்லி சுதந்திரம் போற்றி பின்
சமூக அநீதி பேசும் நாம் எந்த வகையில் சமூக அக்கறைவாதிகள்?

மனிதன் வெறும் கண்ணாடி பொம்மை தான் பார்பதையே தன்னில் பிரதிபலிக்கிறான்! காட்சிகள் மாறத வரையிலும் விம்பங்கள் மாறப்போவதில்லை!

இயேசுநாதர் சொன்னது போல்! (கொஞ்சம் மாற்றி)

மனதில் களங்கமற்றவர் ஒருவர் இருந்தாலும் முன்னால் வாருங்கள் நீங்கள் உண்மையில் சந்தர்பவாதிகள் இல்லை!

அபிராமி மட்டுமே குற்றம் செய்யவில்லை!
பல பேரை அபிராமிகள் ஆக்கும்
ஊடகச் சொல்லாடல்களும் சமூகச் சந்தர்ப்பங்களும் கூட ஒரு காரணம்

வாசிக்கும் போதே அருவருக்கிறது! அடங்காக் காமம் கொண்ட! காமவெறி! இதெல்லாம் தூண்டியது யார்? இங்கே யாரும் செயலின் விளைவு குறித்து வருந்துவதைவிட செயலின் மூலதிற்க்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்! அப்படியானல் அதன் மூலம் என்ன?
யாருக்கும் காமம் இல்லையா???
யாருக்கு உணர்ச்சி இல்லையா??

தப்பைக் கண்டே பிடிக்கமுடியாமல் செய்ய தூண்டுவது அக்கறையா? அல்லது தப்புச் செய்வதைத் தூண்டுவதை தவிர்ப்பது அக்கறையா?

9/11 கோரத்தில் இறந்த கொடூரக் காட்சி கண்டவர் உண்டா?

பிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிணம் பார்க்க முடிந்ததா?

விபத்தில் இறந்தால்கூட உடலை காட்டும் விவஸ்தை கெட்ட ஊடக செயன்முறையை மேற்குலகில் காணமுடிவதில்லை!
மேலும் கொடூரக் காமக்கொலைகள் நடந்தேறுகின்றன அவற்றின் மீதான ஊடகவெளிச்சம் குறைக்கப்பட்டு அதனாலான விளைவுகள் பின்னாலில் ஆவணப்படுத்தப்பட்டு சந்தைபட்டுத்தப்படுகின்றன விழிப்புணர்வு விபரனமாய்!

இதற்கு நேரதிராக நம் தேசங்களில் நடந்தேறும் விளைவுகளிற்கான காரணம் சமூக விழிபுணர்வுகூடிய செய்திகள் அற்றுப் போனதே! திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாகவே பார்க்கப்படாது வியாபரத் தேவைக்காக ஊதிப் பெருதாக்கி இன்று வாழ்வில் பொழுது போக்கில் அது ஒரு அம்சம் என்றல்லாது அதையே வாழ்க்கை ஆக்கி மகிழும் உங்கள் ஊடக மான்பு அழியாவரை இங்கு விம்பங்களும் மாறப்போவதில்லை!

மனிதன் ஒரு சமூக விலங்கு!

இந்தியாவில் தெருவில் எச்சி துப்பியவன் சிங்கப்பூரில் தெருவில் எவரேனும் குப்பைபோட்டால் கொதித்துப் போகிறானே ஏன்?

அவனின் பிரதிபலிப்பு அந்த சமூகத்திடம் இருந்து பிறக்கிறது!

ராமகிருஷ்ணரின் வாக்கு - உன்னைத் திருத்து உலகம்தானாய் திருந்தும்!

ஒவ்வொரு தனிமனிதனின் மாற்றம் ஒரு சமுதாய மாற்றம்! சிந்திப்போம் செயற்படுவோம்!

சமூகவிலங்கு (Social Animal )Where stories live. Discover now