நிரோவின் கனவுகளை நிறைவேற்றி கொண்டே வரும் சர்வேஷ் அவளுடைய மிக பெரிய கனவினை எப்படி நிறைவேற்றாமல் விட்டு வைப்பான் ? அவள் வாழ்வின் இலட்சியம் என்று அதை கூறலாம் .எதை என்று கேட்கிறீர்களா ? இதோ இப்போதே நம் ஆசை நாயகனே கூறப்போகிறான் . நிரோவின் கண்களை காதலோடு பார்த்து , " ரோஸ் , நான் உன்ன ஏன் உன்னை வேலைய resign பண்ண சொன்னேன் தெரியுமா ? " என்கிறான் . நிரோவோ தெரியாது என்று தன் தலையை ஆட்டுகிறாள் .
நிரோவிற்கு தெரிந்திருந்தால் அவள் அவ்வளவு அழுது புலம்பி இருக்கமாட்டாள் . உன்னுடைய நீண்டநாள் கனவு , இலட்சியம் உனக்கு ஞாபகம் இருக்கா நிரோ ? கண்டிப்பா நீ அத மறந்திருக்கமாட்ட ; அப்டியே நீ மறந்திருந்தா அது உன் கனவு , இலட்சியமாக இருக்காது . சரியா நிரோ ?
" ஆமாங்க நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி . என்னுடைய கனவுல நீங்க நிறைவேற்றிய கனவுகளே அதிகமுங்க " என்கிறாள் நிரோ . நீ உன்னுடைய பிறந்தநாள் அதுவுமாக என்ட அடியோ இல்ல திட்டோ வாங்கிடாத நிரோ என்று சொல்லி கொண்டே சிரிக்கிறான் . அங்குள்ள அனைவருமே சிரித்துவிட்டார்கள் .
அவர்களுக்கு தெரியும் சர்வேஷ் , நிரோவை அந்த இரண்டுமே செய்யமாட்டான் என்பது . சரி நிரோ , இப்போ நீ சொல்லு உன்னுடைய இன்னும் நிறைவேற்றப்படாத கனவு என்ன ? என்கிறான் .
உடனே நிரோ " என்னால் முடிந்தளவிற்கு நான் முடிந்தளவிற்கு முயற்சி செய்து , நம் ஊரிலுள்ள அனைவருக்கும் கல்வியறிவு அளிப்பது " என்கிறாள் .
" இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்விதான் "
அத்தகைய கல்வியை , சக்தியை தன் ஊர்மக்களுக்கு கொடுக்க ஆசைப்பட்டாள் நிரோ .
கல்வியின் துணையோடு தன் மக்கள் தங்களின் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நிரோ நினைத்தாள் .
ஆங் .... அந்த கனவை நிறைவேற்ற நான் உனக்கு துணையாக நிற்பேன் நிரோ . அதற்கான முதற்படிதான் நான் உன்னை நம்பள்ளியில் இருந்து விலகச் சொன்னது . நிரோவின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதை சர்வேஷ் உணர்கிறான் .
நம்பள்ளிக்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் நிரோ . ஆனால் நம் ஊர் பெரியவர்களுக்கு கல்வியை கொடுக்க உன்னால் மட்டுமே முடியும் நிரோ . மற்றவர்கள் சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்வார்கள் .
ஆனால் , உன்னால் மட்டுமே உன்னுடைய இலட்சியத்திற்காக போராட முடியும் ரோஸ் என்கிறான் சர்வேஷ் . நம் குடும்பத்தின் மேலுள்ள அன்பு மற்றும் மரியாதையினால் உன்னிடம் அனைவரும் படிக்க வருவார்கள் ரோஸ் . அதுக்குதான் நான் உன்ன வேலையவிட்டு நிக்க சொன்னேன் என்று விளக்கமளிக்கிறான் .
சர்வேஷின் இந்த பிறந்தநாள் பரிசு அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது .உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் சகோஸ் . பிடித்திருக்கிறதா ?
ESTÁS LEYENDO
என் ஆசை கன(ண)வா
Ficción Generalஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.