விதை நிலங்கள் அனைத்தும் இன்று
ஓங்கி வளர்கிறது அடுக்குமாடி கட்டிடங்களாய்நாம் ஒருவேளை உணவு உன்ன
விவசாயி ஒவ்வொரு நொடியும் உழைக்கிறார்கள்ஒரு பெண் பிரசவைப்பது போல தான்
விவசாயமும் கண்ணும் கருத்துமாக பாதுகாக்க படுகிறது ...நமக்கு அன்னமிடும் உழவனும்
அன்னையேநமக்கு உணவை கொடுத்துவிட்டு அவன் பட்டினிகிடைக்கிறான் ...
ஏட்டு கல்வி படித்த நமக்கு படிப்பு சமயம் பார்த்து தான் உதவுகிறது
ஆனால் விவசாயம் நீ ஒவ்வொரு நாளும்
உயிர் வாழ வழிசெய்கிறது ..கோடியில் மிதப்பவனுக்கு தெரிவதில்லை
பசி என்று வந்தால் பணத்தை புசிக்க
முடியாது எனஇன்று உலகை உள்ளங்கையில்
காணும் நம்மில் எத்தனை
பேரால்உண்ணும் உணவை விதைத்தெடுத்து
அடுத்தவன் கையில்
சேர்க்க முடியும்இன்றைய விவசாய நிலை இப்படியே தொடர்ந்தால் நாளை
காய்கனிகளுக்கு
பதிலாய் கணினியை உண்ணும்
நிலைமை தான் அமையும் ..நம்மால் விவசாயத்தில் குதிக்க முடியவில்லை
என்றாலும் விவசாயம் அழியாமல்
செழிக்க
நம்மால் முடிந்த உதவிகளை
செய்வோம் ..அழியா செல்வம் கல்வி எனில் ...
அழிய கூடா செல்வம் விவசாயம் ........
முடிந்தவரைமுயன்று
பயன் பெறுவோம் ...
விவசாயத்தை போற்றுவோம் .....