தடைகளை தகர்த்து தடம்
புரண்டாலும்
உன் தடம் மாறாமல் ஓடு.....வாழ்க்கை வீழ்ந்து போக
அல்ல நன்மதிப்போடு
வாழ்ந்து போக....உன்னிடம் குறை கண்டு நீயே குன்றிவிடாதே குறை
என்பது போக்கி கொள்ளத்தான்....உன் வாழ்க்கை பாதுகாக்க பணம்
ஈட்டு பணத்தை பாதுகாக்கும்
அளவு ஈட்டிவிடாதே
நிம்மதி உறக்கம் தொலைந்து விடும்...சுமை என்று நினைத்தால் வாழ்க்கையே சுமை தான்... கடல் உள்ளே
போனாலும் கடந்து வந்தால் கரைதான்..நேரம் கடத்தாமல் எதிர்நீச்சல்
போட்டு உன் வாழ்க்கை
சீர் செய்ய போராடு...இன்று காணும் அவமானம் எல்லாம்
நாளை நீ
தன்மானத்தோடு வாழ உதவிடும்...நீ என்ன செய்ய போகிறாய் அதில் தெளிவாய் இரு....
உன்னை துச்சமென நினைப்பவரையும் மரியாதையாக நடத்து....உனக்கான வழியில் நேர்மையாய் உழைத்திடு காலம் கடந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்...