அண்ணா

4.5K 151 65
                                    

unga ellathukum thanks... enoda story support paunathuku.. neraya per next update ketahunala, intha kuttyh update ungalukkaka..Konjam personal work nala, ennala quick ah update podamudiyalai.. ini adutha update poda one week aagum.. intha part um kutty than.. please adjust panikonga..

padichutu unga comments solunga

.............................................................................................................................................

  மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது.. யாருக்கு அழகாக விடிந்தது என்று தெரியவில்லை

.. ஆனால் ஜோதிக்கு அந்த காலைப்பொழுது மிக அழகாக இருந்தது.. வழக்கம் போல் எழுந்தவள் , தனது அறையை முழுவதுமாக பார்த்தாள்.. எங்கும் பணத்தின் செழுமை தெரிந்தது..அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது .. ஆனால் நேற்று அவன் நடந்துகொண்ட விதம் அவளை பயத்தை சிறிதளவு குறைத்து காட்டியது.. தனக்கு கிடைத்த இந்த சுதந்திர வாழ்வை சுவாசிக்க தொடங்கினாள்..

அவள் சென்று குளிப்பதற்காக ஆடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் செல்ல, அதன் அமைப்பை பார்த்து மயங்கி நின்றாள்.. தன்னுடைய பழைய நிலைமையும் அவள் கண்களுக்கு வந்து சென்றது .. ஹீட்டர் எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியாமல் நேற்றை போலவே பச்சைத்தண்ணீரில் குளித்துக்கொண்டு வெளியே வந்தாள்.. அவள் மிதமான சுடுதண்ணீரில் அலுப்பு தீர நன்றாக குளித்து பலநாட்கள் ஆகிவிட்டது.. 


  பின் அவள் வழக்கம் போல தயாராகிக்கொண்டு அவளது அறையை விட்டு வெளியே வந்தாள்..

ஹாலில் உட்கார்ந்து அங்கே இருந்த புத்தகங்களை திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள்.. கவினும் எழுந்து தயாராகி வந்து அவளை பார்த்தான்.. அவள் ஹாலில் உள்ள புக்ஸை புரட்டுவதை பார்த்து சிரித்தான்.. "எழுந்துடீங்களா, " என்று ஜோதி கேட்க," ம்ம்ம் .. எழுந்துட்டேன் .. ரெடி ஆகிட்டேன் .. நீ என்ன பண்ற இந்த புக்ஸ் எல்லாம் வச்சுக்கிட்டு " என்று இதழுக்கடியில் சிரிப்பை மறைத்து வைத்துக்கொண்டு கேட்டான்.. "நான் முன்னாடியே எழுந்துட்டேன் .. என்ன பன்னுறதுனு தெரியலை.. அதன் இங்க இருக்கபுக்ஸ் எடுத்து சும்மா பாத்துட்டு இருந்தேன்... ."அவன் சிரித்துவிட்டு , "இதெல்லாம் நீ படிக்குற புக்ஸ் இல்லை .. உனக்கு படிக்கணும்னா இதோ நியூஸ்பெபேர் இருக்கு ..அதைமட்டும் படிச்சா போதும் ... "
அவள் தயங்கிக்கொண்டே, எனக்கு படிக்கச் தெரியாது .. 2 -std வரை படிச்சுயிருக்கேன் ..அதுக்கு அப்புறம் அம்மா காணாம போனாங்க.. அப்புறம் எல்லாமே உங்களுக்கு தெரியுமே .. என்னை படிக்க ஸ்கூல்க்கு அனுப்பவே இல்லை.."அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை .. எனக்கு தெரிஞ்ச இடத்துல சொல்லி உன்னை சேர்த்துவிடுறேன்.. அங்க போன உனக்கு எல்லாமே சொல்லித்தருவாங்க, சரியா.. இனிமேல் நீ எதுக்கும் பீல் பண்ணாத.." என்று கூற அவள் சந்தோசமாக தலையாட்டி "ஹையா... நான் படிக்கபோறேனே..எப்போ கூட்டிட்டு போவீங்க அங்க""ஏன் படிக்குறதுக்கு இவ்ளோ ஆர்வமா""ஆமா.. எனக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை.. அம்மாவும் என்ன நல்ல படிக்க சொல்லுவாங்க .. நான் படிச்சு ஒரு டாக்டர் ஆகனும்னு ஆசைபட்டாங்க.. அந்த வீட்டுல நான் கெஞ்சி பார்த்தேன்.. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யுறேன் .. என்ன படிக்கவைங்கன்னு .. அதுக்கு என்ன அடிச்சு சாப்பாடு போடாம , நானே என்னோட வாயால, படிப்பு வேண்டாம்னு சொல்லுறவரை அடைச்சு வச்சுயிருந்தாங்க..ஒரு வாரம் சாப்டாம இருந்தேன் அப்புறம் மயங்கி விழுந்துவிட்டேன்..  அப்புறம் எனக்கு சாப்பாடு போட்டாங்க .. நான் செத்துடக்கூடாதுனு .. சாப்டுட்டு என்னை வச்சு நிறைய வேலை வாங்குவாங்க .. அடி, உதை, கொட்டு ,அப்பறம் சிகரட்ல சூடு போடுவாங்க ...நான் படிக்குறேனு மறுபடியும் சொன்னேன் , அப்போ என்னை ..." என்று அழுகை ஆரம்பித்துவிட்டாள் ..கவினும் போதும் இதுக்குமேல நீ சொல்லவேண்டாம் .. உனக்கு படிப்புகு ஏற்பாடு பண்றது என்னோட வேலை ஓகே ஆஹ் .. சரி வா வெளிய போய் சாப்பிடலாம் .."இங்க கிட்சேன் இல்லியா ,இருந்த சொல்லுங்க .. நான் சமைச்சு தரேன்""கிட்சேன் இருக்கு, போய் பாரு.. எதுவெல்லாம் வேணும்னு சொல்லு , இப்போ நாம போய் சாப்டுட்டு வரப்போ வாங்கிட்டு வந்துடலாம்" என்று கிட்சேன் அறையை காண்பித்தான் .. இருவரும் கிளம்பி வெளியே சென்று விட்டு ,தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தனர்..அந்த டிரைவர்கோ ஆச்சர்யம் தாளவில்லை.. உடனே கவின் வீட்டிற்கு போன்செய்து எல்லாவற்றையும் கூற, அவர்களோ பணத்திற்காக எவளாவது வந்துஇருப்பாள் என்று கூற, நேற்றிலிருந்து கவின் தம்பி கெட்டபழக்கம் ஏதுமில்லாமல் நல்லபடியாக இருக்கிறார் என்று கூறியதும் அவர்களும் எதோ நல்லது நடக்கட்டும் என்று நினைத்து எதிலும் தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கலாம் என முடிவு பண்ணினார்கள்.. 

மதிய சமையலை ஜோதி கவனித்துக்கொள்ள, கவின் விக்கிகு கால் செய்து , அவனை பேசவிடாமல் திட்டிக்கொண்டு இருந்தான்.. விக்கி, அந்த பொண்ணு எப்படிடா என்னோட ரூமிற்கு வந்தாள் என்று கேட்க, எந்த பொண்ணு டா ? என்று அவன் கேட்டான்..

"மச்சான் ..சாரி டா... அன்னைக்கு வேற நல்ல பொண்ணே கிடைக்கல .. அதன் உங்கிட்ட எதுவும் சொல்லுல..""அப்போ இவ எப்படி என்னோட ரூமிற்கு வந்தாள்""எவடா ?""ஜோதி""எனக்கு தெரியாது மச்சான் " "சரி விடு ...அவ சரியான இடத்துக்கு தான் வந்துஇருக்கா.." என்று கூறிவிட்டு அவளது கதையைசுருக்கமாக விளக்கிவிட்டு, அவள் படிப்பதெற்கென்று ஏற்பாடு செய்ய சொன்னான் .."மச்ச்சான் ... இப்படி ஒரேநாள்ல இவ்ளோ மாறிட்டியேடா.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டா"எனக்கும் அதுதாண்டா தெரியவில்லை என்று மனதிற்குள் நினைத்து விட்டு .. காலை கட் செய்தான்...சாப்பாடு வாசம் மூக்கை துளைக்க , ஜோதி எல்லாவற்றையும் டேபிள் மீது எடுத்துவைத்தாள்..அவனும் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூற , இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர்..திடீரென்று அவனுக்கு புரை ஏற , "ஹயோ.. அண்ணா ... பார்த்து " என்று அவள் தலையை தட்ட தொடங்கினாள்..

நினைவெல்லாம் நீயே..(Completed)Où les histoires vivent. Découvrez maintenant