1...😘😍

341 11 11
                                    

எங்கே போச்சு... இங்கே தானே வெச்சு இருப்பேன்... எல்லா வருஷ டயரியும் இங்கே இருக்கு... ஆனால் நான் முதல் முதலா எழுதுன டயரியை மட்டும் காணுமே என பல நாள் கழித்து தன் பிறந்த வீட்டிற்கு வந்த அதிதி தேடுகிறேன் என்ற பெயரில் அறையையே குப்பைக் கூடமாக மாற்றி இருந்தாள்... அவளை அதிக நேரம் சோதிக்காமல் 2004 ல் அவள் எழுதிய டயரியும் கைகளில் அகப்பட்டுவிட்டது... அதை எடுத்து தூசித் தட்டியவள் தான் கடந்து வந்த பாதையையும் தன் நினைவுகளில் தூசி தட்டத் துவங்கினாள்..

💐💐💐💐 💐💐💐💐

நான் அதிதீ.. எனக்கு வயசு இப்போ ஏழு... எனக்கு தமிழ் நல்லா எழுத வரும்... என் தமிழ் மிஸ். கவிதா என்னை ரொம்ப பாராட்டுவாங்க... ஆனால் என்ன கருமமோ தெரியல என் பேரை மட்டும்  சரியா தமிழ்ல எழுத வராது.... இப்போ கூட பாரு நான் அதிதி னு எழுதுறதுக்கு பதிலா.. அதிதீனு எழுதி வெச்சு இருக்கேன்.... இரு முதலிலே இருந்து ஸ்டார்ட் பண்றேன்...  நான் அதிதி... எனக்கு வயசு இப்போ ஏழு...  என் அப்பா தான் டயரி எழுதுறது நல்ல பழக்கம்ன்னு சொன்னாரு.. நாம மத்தவங்கக்கிட்டே சொல்லாத விஷயத்தை எல்லாம் இதுல சொல்லலாம்னு சொன்னாரா... அதான் அவருக்கு தெரியாம அலமாரியில இருந்து உன்னை சுட்டுட்டு வந்துட்டேன்... இனி நீ எனக்கு மட்டும் சொந்தமான டயரி ஓ.கே வா... உன் கிட்டே நான் மத்தவங்க யாரு கிட்டேயும் சொல்லாத ஒன்னைப் பத்தி சொல்லப் போறேன்... ஏன்னா எனக்கு இப்போ இந்த விஷயத்தை அம்மா அப்பா கிட்டே  சொல்லலாமா வேணாமானு தெரியல??... ரொம்ப பயமா இருக்கு... சொன்னா அம்மா கிட்டே அடி விழும்.. அப்போ நீ டெய்லி எனக்கு தெரியாம சாக்லேட் சாப்பிடுறீயானு என்னை போட்டு அடிப்பாங்க... அந்த கடைக்கார அங்கிளும் இதைப் பத்தி  வேற யாரு கிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொல்லி  இருக்காரு.. அப்படி நான் சொல்லிட்டேன்னா அவரே வந்து அம்மா  கிட்டே நான் டெய்லி சாக்லேட் வாங்கி சாப்பிடுறேன்னு சொல்லிடுவேன்னு மிரட்டுராறு... நீயே சொல்லு நான் யாரு கிட்டே தான் இதை சொல்லுவேன்... அந்த அங்கிள் என்னை தொடுறா  மாதிரி தான்  டி.வியில வந்த ஹீரோவும் ஹூரோயினைத் தொட்டாரு...  அப்புறம் கொஞ்சம் நாளிலேயே அந்த ஹூரோயின் வயிறு பெருசாகி பாப்பா பொறந்தது... அப்போ என் வயிறும் அதே மாதிரி பெருசாகி எனக்கும் பாப்பா பொறக்குமா??.. நீயே என் கேள்விக்கு பதில் சொல்லு டயரி??... பாரேன் உன் கிட்டே பேசுற அவசரத்துல முசா வா முசா வா வை பார்க்க மறந்துட்டேன்... என்ன முழிக்கிற மை டியர் பூதம் மை தான் சொல்றேன்... சரி ஓ.கே நான் போயி டி.வி பார்த்துட்டு கணக்கு டீச்சர் கொடுத்த ஹோம் வொர்க்கை முடிக்கிறேன் இல்லாட்டி க்ளாஸ்க்கு முன்னாடி சேர் போட வெச்சுடுவாங்க... நான் போறேன்... நாளைக்கு மறுபடியும் உன் கிட்டே வந்து பேசுறேன் டயரி.. டாடா..
                      
                       - தொடரும் -

அதிதியின் டயரி..Where stories live. Discover now