2...😘😍

147 9 5
                                    

ஓய் டயரி நான் அழறதை பார்க்காதே... சாரி சாரி உன்னையும் எப்படி நனைச்சிட்டேன் பாரு.... அந்த மேத்ஸ் டீச்சர் என்னைக் கையிலேயே அடிச்சுட்டாங்க தெரியுமா.. இத்தனைக்கும் நான் ஹோம் வொர்க் நேத்தே பண்ணிட்டேன்... ஆனால் அம்மா என் ஸ்கூல் பேக்ல அந்த நோட்டை எடுத்து வைக்க மறந்துட்டாங்க... இப்போலாம் அம்மா என்னைக் கவனிக்கிறதே இல்லை தெரியுமா??... அவங்களாலே தான் நான் டீச்சர் கிட்டே அடி வாங்கினேன்... அம்மா வயித்துல குட்டி பாப்பா வந்ததுல இருந்து என்னை இப்போலாம் கவனிக்கவே மாட்டேங்குறாங்க... என் கூட விளையாடக் கூட மாட்டேங்குறாங்க... வீட்டுக்கு வந்தாலே ரொம்ப தனியா இருக்கா மாதிரி இருக்கு... அப்பா நைட் லேட்டா வராதாலே என் கூட விளையாடவும் மாட்டேங்குறாரு... ஸ்கூல்ல ப்ரீத்தியோட விளையாடுறதோட சரி... அப்புறம் யாரு கூடயும் பேசுறது இல்லை... வீட்டுக்கு வந்தாலும் உள்ளேயே பிடிச்சு போட்டுடுறாங்க... எவ்வளவு நேரம் தான் படிச்சுட்டே இருக்க முடியும்.... எனக்கு போர் அடிக்காதா??...  இன்னைக்கு சயாந்திரம் ஸ்கூல் விட்டு நடந்து வர அப்போ ஃப்ளாட்க்கு பக்கத்துல வீட்டுல இருக்குற குழந்தைங்க எல்லாம் ஜாலியா விளையாடிட்டு இருந்தாங்க... எனக்கும் அவங்கக் கூட விளையாடனும் போல ஆசையா இருக்கு... ஆனால் அம்மா தான் அவங்கக் கூட லாம் சேரக் கூடாதுனு சொல்லிட்டாங்க... அவங்க எல்லாம் கெட்ட பசங்களாம்.. சேரக் கூடாதாம்.... அவங்க படிக்காத பசங்க.. நீ அவங்கக் கூட சேர்ந்தா கெட்டுப் போயிடுவேனு சொல்றாங்க... ஆனால் அந்த பசங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லா ஜாலியா தானே விளையாடுறாங்க... நான் நல்ல புள்ளையா இருந்தும் யாரும் இல்லாம தனியா இருக்கேன்... இதுக்கு நானும் கெட்ட பிள்ளையாவே ஆகி இருக்கலாம்... அட்லீஸ்ட் விளையாடவாவது செய்வேன்... ஆமாம் உன் கிட்டே சொல்ல மறந்துட்டேன் பாரு... இனி நான் அந்த கடைக்குப் போய் சாக்லேட்டே வாங்கி சாப்பிட மாட்டேன்... எனக்கு அந்த அங்கிள் பண்றது எல்லாம் சுத்தமா பிடிக்கவே இல்லை அதுனாலே தான். ... இரு டயரி  யாரோ கதவைத் தட்டுறா மாதிரி இருக்கு நான் கதவைத் தொறந்துட்டு அப்புறம் வந்து  உன் கூட பேசுறேன்...  ஐயோ டயரி அந்த கடைக் காரர் வாய்ஸ் எனக்கு கேட்குது.. அப்போ அவர் தான் கதவைத் தட்டுனாரா??... நான் இன்னைக்கு கடைக்கு வராததாலே அவர் வந்து நான் சாக்லேட் சாப்பிடுறதை  அம்மாக் கிட்டே சொல்ல போராரா?? எனக்கு பயமா இருக்கு டயரி...

அதிதியின் டயரி..Where stories live. Discover now