5...😍😘

218 15 13
                                    

ஏஞ்சல் நாங்க புது வீட்டுக்கு வந்துட்டோம் தெரியுமா??... முன்னாடி அப்பார்ட்மென்ட்ல இருந்தோம்ல அந்த மாதிரி இல்லை இந்த வீடு... அங்கே எல்லா கதவும் மூடியே இருக்கும்.. ஆனால் இங்கே தனித் தனி வீடா இருந்தாலும் எல்லார் வீட்டுக் கதவும் திறந்து இருக்கு... பசங்க எல்லோரும் ஜாலியா வெளியில விளையாடுறாங்க.. நான் அம்மா கிட்டே உம்முனு முகத்தை வெச்சுக்கிட்டு விளையாட போகட்டுமானு கேட்டனா அம்மாவும் ஓ.கே சொல்லிட்டாங்க... நான் போய் அந்த பசங்க கூட விளையாட ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு கை கொடுத்தனா.. முதலிலே என்னை எல்லோரும் ஏற இறங்கப் பார்த்தாங்க.. அப்புறம் அவங்க எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்னு கையைக் கொடுத்துட்டாங்க.. செமயா விளையாடுனேன் தெரியுமா??.. ஷால் ஒன்னுல எல்லோரும் உள்ளே போய் ட்ரைன் மாதிரி செஞ்சு விளையாடுனோம்... அப்புறம் ரைட்டா ரைட்டு.. கண்ணாமூச்சு... லாக் அன்ட் கீனு நிறைய விளையாட்டு விளையாடணும்.. அங்கே இருந்த ஆகாஷ் அஜ்ய்லாம் எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க... தேங்க்ஸ் ஏஞ்சல் என் விஷை நிறைவேத்துனதுக்கு... எனக்கு புது வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு... ஆனால் ஸ்கூல்ல தான் யாரும் புது ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கல.. அங்கே இருக்க டீச்சர்ஸ் எல்லாரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு... அப்புறம் இன்னைக்கு சயாந்திரம் கொம்புல பொம்மையை சொருகிக்கிட்டு ஒரு அங்கிள் வந்தாரு.. கையிலே வாட்ச், மோதிரம்லாம் செஞ்சு கொடுத்தாரு தெரியுமா??.. அதை சாப்பிடவே அவ்வளவு டேஸ்டா இருந்தது.. ஆசை சாக்லேட்க்கு அப்புறம் எனக்கு இந்த சாக்லேட்டை ரொம்பப் பிடிச்சு போச்சு.. அப்புறம் ஐஸ் வண்டி வந்த உடனே பக்கத்துல இருந்த எல்லா பசங்களும் க்ளாஸைத் தூக்கிட்டு ஓடுனாங்க...  அவங்கக் கிட்டே இருந்து நான் கொஞ்சம் ஐஸ் வாங்கி சப்பிட்டு வீட்டுக்கு வந்தனா.. அம்மா என்னைப் பார்த்து ஐஸ் சாப்பிட்டியானு கேட்டாங்க.. ஆனால் நான் இல்லைனு சொன்னதும் போட்டு அடிச்சாங்க... வாயெல்லாம் நல்லா கலரா இருக்கு பொய் சொல்றியானு கேட்டாங்க... உண்மையா நான் பொய் சொல்லவே ஏஞ்சல்... நான் ஐஸ் சாப்பிடவே செய்யல.. சப்ப மட்டும் தான் செஞ்சேன்.... அதான் அம்மா கிட்டே இல்லைனு சொன்னேன்... அதுக்கு போட்டு அடிக்கிறாங்க... ஆனால் அங்கே அப்பார்ட்மென்ட்ல இருக்கும் போதுலாம் இப்படி எந்த அங்கிளும் விக்க வரல ஏஞ்சல்.. இங்கே நிறைய பேரு வராங்க... ஜாலியா இருக்கு... ஹேப்பியா இருக்கேன்... ஹே ஏஞ்சல் ஒரு நிமிஷம் இரு... அம்மா அழற சவுண்ட் கேட்குது... அப்பா என் கிட்டே அம்மா இந்த மாதிரி அழற சவுண்ட் கேட்டா உடனே போய் பார்க்கணும்னு சொன்னாரு... அம்மா ரொம்ப கத்துறாங்க.. நான் போய் என்னனு பார்த்துட்டு வரேன்.. டாடா

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 21, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

அதிதியின் டயரி..Where stories live. Discover now