3...😘😍

123 11 3
                                    

ஹே டயரி.. நான் நேத்து ரொம்ப பயந்துப் போயிட்டேன்ல அந்த அங்கிள் வந்து நான் சாக்லேட் சாப்பிடுறதை சொல்லிடப் போறாரோனு.. ஆனால் அவர் அதை சொல்ல வரலயாம், அம்மா கிட்டே பணம் வாங்கிட்டு போக தான் வந்தாராம்... நான் வேற ரொம்ப பயந்துப் போயிட்டேன், அம்மா என்னை திட்டுவாங்களோனு... ஆனால் அம்மா என்னைத் திட்டலயே... அப்புறம் அப்பா கிட்டே அம்மா பேசுறதைக் கேட்டு தான் எனக்கு தெரிஞ்சுது நம்ம இனி புது வீட்டுக்குப் போகப் போறோம்னு... அப்பா வேற வேலைக்கு போறதாலே அவர் கம்பெனிக்கு  பக்கமா இருக்கிற வீட்டுக்கு போகப் போறோமாம்.... நாம அங்கே போயிட்டா அந்த அங்கிள் வந்து இனி என்னைப் பயமுறுத்தமாட்டாருல அதை நெனைச்ச உடனே செம ஜாலி ஆகிருச்சு தெரியுமா.... நம்ம என்ன விஷ் பண்றோமோ கேட்குறாமோ அதை ஏஞ்சல் தரும்னு என் மிஸ் சொல்லுவாங்க... நீயும் எனக்கு ஏஞ்சல் மாதிரி தான்... நான் உன் கிட்டே சொன்ன இரண்டு நாளிலேயே அந்த அங்கிளை இனிப் பார்க்காத மாதிரி ஆகிருச்சு இல்லை....  அதனாலே இனி நீ எனக்கு டயரி கிடையாது.. ஏஞ்சல் ஓ.கே..... என் விஷ்லாம் நான் உன் கிட்டே கேட்பேனாம் நீ அதை எல்லாம்  ட்ரு ஆக்கணும் ஓ.கே வா... ஆனால் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு... அந்த வீட்டுக்கு போயிட்டா.. என் ப்ரெண்ட் ப்ரீத்தியை பார்க்க முடியாதுல... அவள் மட்டும் தான் என் கூட விளையாடுவா... நாம அங்கே போயிட்டா  அவள் கொண்டு வர லஞ்சை சாப்பிட முடியாது... அவள் கிட்டே இருந்து ரப்பர் கடிச்சு வாங்க முடியாது.... அவளோட அதிகம் பேசக் கூட முடியாதுல... அங்கே போனா அம்மா மறுபடியும் என்னை வீட்டுக்குள்ளேயே தான் பிடிச்சுப் போட போறாங்க... அங்கே எனக்கு புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்களானு  தெரியல டயரி... சாரி சாரி டயரி கிடையாது நீ ஏஞ்சல்...மாத்தி எழுதிட்டேன்... இன்னைக்கு நான் உன் கிட்டே 2 விஷ் கேட்குறேன்... ஒன்னு எனக்கு நியூ ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கணும்.. இரண்டாவது அந்த அங்கிளை இனி நான் பார்க்கக்கூடாது சரியா... என் விஷ்ஷை சீக்கிரமா நிறைவேத்திடு ... ஓ.கே ஏஞ்சல் பாய் தூக்கம் வருது உன் கிட்டே நாளைக்குப் பேசுறேன்...  என நாட்குறிப்பின் அந்த பக்கத்தில் எழுதி  இருந்ததைப் படித்த  அதிதி தனது ஏஞ்சலைப் பார்த்து பேசத் தொடங்கினாள்...

" ஓய் ஏஞ்சல் உன் கிட்டே நான் அந்த கடைக்காரரை பார்க்க்கூடாதுனு தானே விஷ் கேட்டேன்... ஆனால் இத்தனை வருஷம் கழிச்சு நான் அந்த கடைக்காரரை இன்னைக்கு  பார்த்தேன் தெரியுமா??... ஆனால் நீ என் விஷை ட்ரூ ஆக்கலனு நான் உன் கூட சண்டை போட மாட்டேன் ஏஞ்சல்.... ஏன்னா அந்த அங்கிளைப் பார்த்ததும் நல்லதுக்கு தான்..."

அதிதியின் டயரி..Where stories live. Discover now