💙💙💙💙💙💙சோ ஸ்டூடன்ஸ் ஜூன் சிகென்ட் (2nd) காலேஜ் ரியோபன்...கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் சம்மர் ஹாலிடேஸ் இருக்கு...
நீங்க லீவ் முடிஞ்சு வரும்போது 15-30டேஸ் இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் முடிச்சு ரிப்போர்ட்ஸோட வரணும் என்றபடி அந்த பேராசிரியர் வெளியேற....ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று அந்த டிபார்ட்பென்ட் எச்.ஓ.டியிடம் இருந்து இன்டர்ன்ஷிப்கான ஃபோனாப்பைடை பெற அந்த வகுப்பில் ஆறு பேரினாலான ஒரு கேங் மட்டும் இன்டர்ன்ஷிப்பிற்கு எங்கே செல்வது என்ற குழப்பத்திலேயே இருந்தனர்....
வகுப்பு நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் எப்பொழுதும் விளையாட்டு,அரட்டை எனச் சுற்றித் திரித்தவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் மார்க் அவர்களின் கடைசி செமிஸ்டரில் சேர்ப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தனர்...
இப்போது இவர்களை தவிர மற்ற அனைவரும் இன்டர்ன்ஷிப்கான லேப் அல்லது மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்த பின்பே இவர்கள் நேரம் கடத்தியது விளங்கியது.......
அதில் ஐவரும் ஒருவனை முறைக்க...மேஜையின் மேலிருந்த தன் கைப்பேசியை எடுத்தவன் பின்னிருந்த மேஜையின் மீது எகிறிக் குதித்து அங்கிருந்து ஓடினான்.....
அவனை துரத்திக் கொண்டு இருவர் அரவிந்த் நில்லுடா!!கையில மாட்டுனா கொன்றுவ!!என்றபடி துரத்த
முதல் மாடிக்கு ஓடியவன் அங்கிருந்த பாத்ரூமில் புகுந்துக்கொள்ள துரத்தி வந்த பெண் வெளியிலே நின்றுவிட அந்த ஆடவன் மட்டும் அவனை தொடர்ந்துச் செல்ல அரவிந்த் ஒரு பாத்ரூமினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்....
டேய் கதவை திறந்தா நல்லது!!!என வெளியே நின்றவன் மிரட்ட.....அரவிந்த் உள்ளிருந்தபடியே தன் சகோதரனை அழைக்க இரண்டு முறையும் அழைப்பை ஏற்காதவனை அர்ச்சித்தபடி மீண்டும் அழைத்தான்....
அரவிந்த் இது என்னோட ட்யூட்டி டைம்னு தெரியும்ல இடியட்!!!
அடேய் டாக்டர்!!!இப்போ மட்டும் நீ உதவி செய்யலைனா உன் தம்பியை ஐந்து காட்டுவாசிங்க உசுரோட தின்னுடுவாங்க.....
YOU ARE READING
(காதலின்)தடம்❤
Mystery / Thriller💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"