தடம்💙4👣

689 75 83
                                    

💙💙💙💙💙💙அடுத்த நாள் காலை.....

ஜாகிங் முடித்து சந்தீப் அவன் வீடு மற்றும் கெஸ்டு ஹவுஸ் இருக்கும் காம்ப்பௌன்ட்டிற்குள் நுழைய அங்கு....

ஒரு காலில் மண்டிப் போட்டு அமர்ந்தவாறு கார்டனில் இருந்து எடுத்த சில பூக்களை கையில் ஏந்தியவாறு அர்விந்த் பைரவியிடன் லவ் யூ ப்யூட்டுஃபுல்!!என்றான்...

சுவேதா அவன் பின்னால் நின்று இவர்களை முறைப்பதை பார்த்த பைரவிக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது....

பூக்களை வாங்கும்படி அவன் மீண்டும் அவளிடம் நீட்ட.....பூக்களை வாங்கிக் கொண்டவள் சிரிப்பை சிரமப்பட்டு மறைத்து அவன் கன்னத்தை கிள்ளி ஆவ்!!லவ் யூ டூ ஸ்வீட் ஹார்ட் என்றாள்....

வியர்வை துடைத்துக் கொண்டிருந்த டவலை தூக்கி எறிந்த சந்தீப்.....இது வீடா?லவ்வர்ஸ் பார்க்கானே தெரியல!!!ஸ்வீட் ஹார்ட்டா....ஸ்வீட் ஹார்ட் என புலம்பியபடி உள்ளே சென்றான்....

கார்டனில் அர்ஜீனை துரத்திக் கொண்டு சுவேதா ஓட....ஹேய்!!!என்னடி நீதான பூ வேண்டானு சொன்ன?அப்போ நான் யாருக்கு வேணுனா கொடுக்கலாதானே??என்றபடி பைரவி பின்னால் மறைந்தவன் "காப்பாத்தே திரோகி" என்றான்....

திரோகி என்பதற்கு முறைத்த பைரவி சுவேதாவிடம் பாரு சுவே!!உன் முன்னாடியே எனக்கு ப்ரோப்போஸ் பன்றா!!என்றவுடன் சுவேதா அவனை வேகமாக அடிக்க.....

உன் முன்னாடியே இப்படி!இன்னும் நீ இல்லாத நேரத்தில எந்த பொண்ணுகிட்ட என்ன ஃபலர்ட் பண்றானோ கடவுளுக்குதாமா தெரியும்!!!என்றபடி தன்னுடைய வேலையை இனிதே முடித்த பைரவி அங்கிருந்து நகர அவள் பின்னால் அரவிந்த் அடி வாங்கி கத்தும் சத்தம் கேட்டது......

உள்ளே க்ரீன் டீ குடித்துக் கொண்டிருந்த சந்தீப் சிரித்தடி உள்ளே நுழைந்த பைரவியின் புறம் டீபாயில் இருந்த காபி மக்-ஐ நகர்த்தினான்.....

தன்னை முறைத்துக் கொண்டே திரிந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களை நேற்றையிலிருந்து அவன் கவனிக்கும் முறை அவள் கவனத்தை ஈர்க்கும் வகையிலையே இருந்தது....

(காதலின்)தடம்❤Where stories live. Discover now