💙💙💙அடுத்த நாள் காலை தன் கீழ் பணிபுரியும் காவலர்களை சந்தித்த அர்ஜீன் கடந்த வாரம் முழுவதும் தான் சென்ற பொது இடங்களில் உள்ள கேமரா ரெக்கார்டிங்ஸ் அனைத்தையும் பெற்றுக் கொண்டு வரும்படி கூறினான்....
மீண்டும் வீட்டிற்கு சென்றவன் கையில் மடிகணினியுடன் அமர,அர்ஜீனின் அம்மா கையில் அவனுக்காக கொண்டு வந்த காபியை டீபாயில் வேகமாக வைக்க அந்த சத்தமும் கப்பைவிட்டு கீழே கொட்டிய காபியும் அர்ஜீனின் கவனத்தை இழுத்தது......
என்ன சுபா??காலைலயே நல்ல மூட்-ல இருக்க போலயே!!!!ஈஈஈ க்குலாம் காபி கொடுத்துட்டுதா புள்ளைக்கே காபி கொடுக்குற!!!என அவர்கள் காபியை கீழே கொட்டியதை சுட்டிக்காட்டி நகைத்தான்....
வேண்டாடா!!காலைலயே என்னை சீண்டாத....
அப்படி என்ன ஆச்சு பேபி??
டேய் எதுக்கு என் பொண்டாட்டிய டென்ஷன் பண்ற?என அவன் தந்தை அங்கு வந்தார்
யாரு நானா??நீங்க இரண்டு பேரும் சேர்ந்து என்ன டென்ஷன் பண்ணாம இருந்தா சரி😐என்றான்
அடப்பாவி நீ பேசுறதை வெளியே யாராவது கேட்டா கூட நாங்க ஏதோ உன்னை கொடுமைப்படுத்துறதா நினைச்சிப்பாங்க போல இருக்கே!!!என்ற தந்தையை பார்த்து சிரித்தவன் சரி சரி எதுக்கு இப்போ உங்க ஒய்ப் என் மேல கோபமா இருக்காங்கனு கேளுங்க என்றான்....
அவர் ப்ரண்ட்டோட பொண்ண எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,இந்த வியாழக்கிழமை அந்த பொண்ண பார்க்க அவங்க வீட்டுக்கு போறோனு சொன்னனே நியாபகம் இருக்கா!!!😠😠
ஹா மா இருக்கே...நான் கூட பர்மிஷன் போட்டுட்டு வரனு சொல்லிட்டனே!!அப்பறம் என்ன??
டேய் யாருக்கோ பார்க்க போகலை,உனக்குதா அது புரியுதா இல்லையா எனத் தன் தந்தையின் குரல் உயர்வதை உணர்ந்தவன் அமைதியானான்....
அந்த பொண்ணோட ஃபோட்டோ காட்டுங்கனு ஒரு முறையாவது கேட்டியடா??என்ற அன்னையை பாவமாக பார்த்தவன் தந்தையிடன் இருந்து காப்பாற்றுமாறு கண்களாலே கெஞ்சுனான்...
YOU ARE READING
(காதலின்)தடம்❤
Mystery / Thriller💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"