ஆதிராவின் இல்லத்தில்...
சந்திரா ஒவ்வொரு நியூஸ் பேப்பர் ஆக படிக்க தொடங்கினாள்.
ஆதிரா ஆதவனின் டைரி ஐ படிக்க ஆரம்பித்தாள்..
ஆதிராவை பார்த்த முதல் நாள்..
ஆதவனின் பார்வையில்.அன்று கல்லூரி அட்மிஷன் நடந்து கொண்டு இருந்தது.
மாபெரும் மானிட கூட்டம் கண்டு அஞ்சும் சிறு பிள்ளை போல தன் தந்தை அரவணைப்பில் வந்தாள்.
முதல் நாள் என்றே கவலை..இவ்வாறே சிறு சிறு பார்வைகள் தினமும்.
பேச நினைக்கும் மனம். ஆனால் சிறு படபடப்பு. ஆதிராவின் பார்வை சற்று கோவத்தோடும் இருக்கும்.பேசநினைத்த தருணங்கள் இன்றும் நினைவில்...
இப்டியே எக்கணமும் இருக்காதோ ஏங்கிய நாட்கள்...ஆதவனின் ஒரு தலை காதல் தான் ஆதிரா என்று அக்கணம் புரிந்தது.
சந்திரா சில பேப்பர் படித்து முடித்தாள்.
சந்திராவிடம் ஆதவனின் கல்லூரி காதல் பற்றி சொன்னாள்.
சந்திராவும் ஆச்சர்ய பட்டாள்.சந்திரா : ஆனால் இது மிகவும் நல்ல செய்திதான். அவர் உன்னை இந்த அளவு நேசித்தவர். அவர் உன்னை விரும்பியது உனக்கும் தெரியாது.
ஆதிரா : ஆமா சந்திரா. ஆனால் எனக்கு ஆதவனை கண்டு பிடிக்க வேண்டும். ஏதாவது சொல் சந்திரா..
சந்திரா : ஒன்று செய்யலாம் ஆதிரா. இப்பொது உறுதியானது அவர் நம் கல்லூரியை சேர்ந்தவர் என்று. ஆகையால் நாம் அங்கு செல்லலாம். வா...
ஆதிராவும் சந்திராவும் ஆதவனின் கல்லூரிக்கு செல்கின்றனர்.
சந்திரா ஆதிராவை அழைத்து கல்லூரி அலுவலகத்திற்கு சென்றாள்.
சந்திரா ஆதவனை பற்றி அலுவலக உதவியாளரிடம் கேட்டார்.அலுவலக உதவியாளர் என்ன அவசியம் எதனால் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்க, ஆதிரா தன் மனஸ்தாபத்தை சொல்லினர்.
சரி என்று அவர் ரெஜிஸ்டர் இல் செக் செய்தார். ஆனால் அவரும் ஒரு புதிரான பதிலே சொன்னார்.
DU LIEST GERADE
ஆதிரா
Mystery / Thrillerஆதிராவின் வாழ்க்கை இல் நடக்க இருக்கும் மர்மம் மற்றும் காதல். ஆனால் என்னால் இதை ஒரு காதல் கதை என்று சொல்ல முடியாது, பெண்ணை மட்டுமே முதற்கொண்ட கதை என்றும் அல்ல. கண்டிப்பாக உங்கள் ஆர்வத்திற்கு குறை வைக்காமல் கதை நகரும்.