அடுத்த நாள் காலை, கல்லூரி வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது.
ஆனால் ராஜா மிக வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்தான்.
சிலர் ராஜா வை உற்று நோக்க, ராஜாவின் பின்னே ஆதிரா துரத்தி வந்து கொண்டு இருந்தால்.
ஆம். ராஜா ஆதிராவின் ஆர்வத்தை கண்டு தன் கல்லூரி மாணவன் சீனியர் ராகவன் இடம் அழைத்து செல்ல அவன் போலீஸ் வார்த்தை கேட்டவுடனே தலை தெறிக்க ஓடிவிட்டான். கடைசி வரை அவன் ராகவனா எனவும் தெரியவில்லை, யார் என்றும் தெரியவில்லை.சிறிது நேரம் பிறகு..
ஆதிரா வை பார்க்க யாரோ வந்திருப்பதாக அவள் தோழிகள் கூறினார்கள்.
ஆதிரா அவர் யார் என்று பார்க்க செல்ல...வந்து இருந்தது ஆதிராவின் அம்மா.
ஆதிராவை உடனடியாக அழைத்து செல்ல வந்ததாகவும், வா உடனே செல்ல வேண்டும் என்று அழைத்து சென்றுவிட்டார்.பாட்டி இன் ஆசை தனது ஒரே பேத்தியின் திருமணம் பார்த்து விடவேண்டும் என்றே..
அன்னையின் கடைசி ஆசை புரிந்து நடக்கும் கட்டாயத்தில் வள்ளியம்மை உள்ளார்.ஆதிராவிற்கு உடனடியாக திருமணம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். வள்ளியம்மை உம் சுந்தர ராஜன் உம் ஆதிராவின் பெற்றோர். சுந்தர ராஜன் தன் ஏற்கனவே ஆதவன் என்கிற ஒரு மாப்பிளை பிடித்து பேசி வைத்து இருந்தார். பின் அவரையே முடிவு செய்தனர்.
ஆதிராவின் கல்வி அன்றே கடைசி நாள் ஆனது.
ஆதிரா வும் அம்மாவும் வீட்டிற்கு செல்லாமல் அரசு மருத்துவமனை சென்றனர்.
ஆதிராவின் பாட்டி மருத்துவமனை இல் அவசர பிரிவில் உள்ளார் என்ன தெரிந்தது. பாட்டி இன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாள் தக்க வைக்க இயலாது என்றுவிட்டனர்.திருமணம் நிச்சயிக்க பட்டு.. நடக்க இருக்கும் நாள் இன்று...
மார்ச் 7,
ஆதிராவின் தோழிகளின் கேலிகள் ஒரு பக்கம்,சிலர் ஆதவன் பார்க்க நன்றாகவே உள்ளார். திருமணத்தை மனமார ஏற்றுக்கொள்ள என்றனர். ஆனால் ஆதிராவின் கனவு லட்சியம் என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியாது...
ŞİMDİ OKUDUĞUN
ஆதிரா
Gizem / Gerilimஆதிராவின் வாழ்க்கை இல் நடக்க இருக்கும் மர்மம் மற்றும் காதல். ஆனால் என்னால் இதை ஒரு காதல் கதை என்று சொல்ல முடியாது, பெண்ணை மட்டுமே முதற்கொண்ட கதை என்றும் அல்ல. கண்டிப்பாக உங்கள் ஆர்வத்திற்கு குறை வைக்காமல் கதை நகரும்.