இருளை போக்குவதற்காக ஆதவன் தன் ஒளி கதிர்களால் வானத்திற்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருந்த வயல்வெளிகள்,கண்ணை கவரும் வண்ண பூக்கள்.தன்னவனை காண வந்த நிலவு மகள் அவனை காணமல் சிந்திய கண்ணீர் துளிகள், பனித்துளிகளாக மாறி இயற்கை அழகை இன்னும் கூட்டியிருந்தது. இயற்கை எழிலில் ஊட்டி கொடைக்கானல் போன்ற ஊர்களை போடி என்றுவிடும் எங்கள் 'போடி'.
அந்த வீதியில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த வீடு,பார்பவர் அணைவருக்கும் அதன் பழமையையும்,பெருமையையும் அதன் தோற்றத்திலேயே உரைத்துவிடும்.
சௌபாக்கிய லக்ஷ்மி வருவாயே-மனை மங்களம் பொங்க (2)
வாசலில் வண்ண கோலங்கள் இட்டு
வாழையும் மாவிலை தோரணம் கட்டி
ஆசனம் அமைத்து நெய் விளக்கேற்றி
அன்புடன் அழைத்தோம் அன்னையே வருக
மல்லிகை ஜாதி மருவுடன் ரோஜா
மணமிகு தாழம்பூ மலர்களும் மற்றும்
எல்லையில்லாத பக்தியும் சேர்த்து
ஈஸ்வரியே உனக்கு அர்ச்சனை செய்வோம்
பாயஸ வடையும் பக்ஷண வகையும்
பலவித பழங்களும் கொழுக்கட்டை தினுசும்
ஆசையுடன் உனக்கு அர்ப்பணம் செய்வோம்
அம்பிகையே எந்தன் அன்னையே வருக
ஜல் ஜல் ஜல் என சலங்கைகள் ஒலிக்க
கல கல கல என வளையல்கள் குலுங்க
கல் கல் கல் என காற்சிலம்பொலிக்க
கருணையினால் எங்கள் கஷ்டங்கள் பறக்க
(சௌபாக்ய)
அந்த பாடல் பூஜை அறையை தாண்டி வீடெங்கும் அவள் குரலில் அழகாக ஒலித்தது.
வெண்மதி, ஏய் வெண்மதி இன்னும் எனக்கு காபி குடுக்காம என்னடி பண்ற,எங்க போய் தொலைஞ்சாளோ.
வர வர இவளுக்கு என் மேல கொஞ்சம் கூட பயம் இல்லாம போச்சு.எல்லாம் சேகர் குடுக்குற இடம்.அதான் இந்த ஆட்டம் போடுறா.
அந்த வீடே அதிரும் படி கத்திக் கொண்டிருந்தார் சொர்ணம்.
VOCÊ ESTÁ LENDO
நீ வருவாய் என நான் இருந்தேன்
Romanceஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை பற்றிய கதை.