உறக்கத்தை தேடி மாடிக்கு சென்ற தேவின் செவிகளை தொட்டது அந்த பாடல். அந்த பாடல் என்ன மொழி அதன் அர்த்தம் என்ன எதுவும் அவனுக்கு புரியவில்லை.(என்ன பாட்டுன்னு இப்போ சொல்லமாட்டேன் சஸ்பன்ஸ்😜😜😜😜)ஆனால் அந்த குரலும் அதில் இருந்த ஏக்கமும் அவனை ஏதோ செய்தது.
அப்பொழுது தான் நினைவு வந்தவனாய் தன் கை கடிகாரத்தை பார்க்க அது இரவு 11:30 மணி என காட்டியது.இந்த நேரத்துல யார் பாடுறது. ஒரு வேல சந்திரமுகி படத்துல ஜோதிகா நைட் நைட் டான்ஸ் ஆடுற மாதிரி ஏதாவது பேய் வந்து பாடுதோ என்ற பீதியுடன் அவன் தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டி பார்க்க அந்த வீதி ஆள் அரவமற்று இருந்தது.ஆனால் அந்த பாடல் மட்டும் மிகவும் மெலிதான குரலில் அதே நேரம் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது.என்ன தான் பேயாக இருக்குமோ என்ற பயம் இருந்தாலும் அந்த பாடலில் லயித்து அப்படியே உறங்கி விட்டான்.
ஆதவனின் ஸ்பரிசத்தால் துயில் நீங்கியவனால் அந்த இயற்கை அழகை ரசிக்காமல் இருக்க முடிவில்லை.
எப்பொழுதும் கேட்கும் வாகனங்களின் இரைச்சல், செல்ஃபோனின் அலாரம் இவைகளை கேட்டே விடியலை தொடங்கி பழகியவனுக்கு கீச்சிடும் பறவைகளின் ஒலி, சுத்தமான காற்று, நாசியை துழைக்கும் பூக்களின் நறுமணம் இவை அணைத்தும் ஒரு புதுவித ஆனந்தத்தை தந்தது.
துள்ளளோடு மாடியில் இருந்து இறங்கினான்.டேய் ஜெய் கொடி பாட்டு பாடுவாளாடா?
அவனின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஜெய் அவன் கேட்ட அதிர்ச்சியில் குடித்து கொண்டிருந்த காபியை துப்பிவிட்டு சிரிக்க தொடங்கினான்.
இப்போ நா என்ன கேட்டேன்னு இவன் இப்படி சிரிக்கிறான்.டேய் ஏன்டா சிரிக்கிற?
............😂😂😂😂😂😂😂
டேய் எரும கேட்டுகிட்டே இருக்கேன் பதில் சொல்லாம சிரிக்கிற பக்கி.
இல்ல அவ பாட்டு பாடுவாலான்னு கேட்டியே அதான் மச்சான் சிரிக்கிறேன்.
ESTÁS LEYENDO
நீ வருவாய் என நான் இருந்தேன்
Romanceஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை பற்றிய கதை.