யோசித்து கொண்டே இருந்தபோது
சைத்தாலி.... ஆஆம்மாடி....
யாரு... மேல பார்த்தேன்
... அட ராஜம் மாமி....சைத்தாலி :மாமி... நீங்களா??? மேல தான் உங்க v2 ஆ நல்லதா போச்சு போங்க...
ராஜம் :ஆமா டி அம்மா... நான் கூட உன்ன கூப்பிட கீழ வரலாம் னு இருந்தேன்... பார்த்த நீ வெளில நின்னுட்டு இருந்த...
சைத்தாலி :எதுக்கு மாமி... எதாச்சும் முக்கியமா பேசணுமா??
ராஜம் :ஆமா டி மா.... இன்னைக்கு எங்க ஆத்துல பௌர்ணமி பூஜை..அதுக்காக உன்னையும் உன் ஆத்துகாரரையும் கூப்பிடலாம் னு இருந்தேன் உன் போன் நம்பர் என்ட இல்லடி அம்மா... அதன் என்ன பண்றதுனு நெனச்சேன் நல்லா வேலைய நீ கீழ தான் குடி இருக்க னு தெரிஞ்சிட்டு... 6 மணிக்கு மறக்கமா... வந்துருங்க v2கு சரியா...
சைத்தாலி :ஓஓ... கண்டிப்பா வரேன் மாமி...
சற்றென்று ஜன்னல் வழியே மைதிலி தெரிகிறாளா என்று பார்த்தேன் என் கண்ணுக்கு அவள் தென்பட வில்லை.... எதோ ஒரு இனம் தெரியாத உறுத்தலுடன் அங்கேயிருந்து உள்ளே சென்றேன்....
மாலை 5. 30 மணி....
ராகுல் :சைது.... பேபி .. வாட் doing??? என்று கூறி என் பின்னால் வந்து அணைத்தவாறு நின்ற ராகுல் ஐ திரும்பி பார்த்தேன்.... அவர் எதோ பேச வாய் எடுத்த போது
அதில் ஒரு வடை யே வைத்தேன்ராகுல் : வாவ் என்ன இது வடை லாம் டேஸ்ட் அ வேற இருக்கு... ஆமா ன உன்ன சமைக்க வேணாம் வெளில போகலாம் னு சொன்னேன்ல.... இருந்தாலும் பரவால்ல இனோரு வடை குடு டேஸ்ட் செம....
சைத்தாலி :உங்களுக்கு பிடிச்ச கீரை வடை செஞ்சேன்.... இன்னைக்கு எங்கையும் போக வேணாம் ங்க இன்னைக்கு பௌர்ணமி ஆம் ... ராஜம் மாமி v2ல பூஜை னு உங்களையும் என்னையும் கூப்பிட்டாங்க நம்ம அங்க போகலாமே...
ராகுல் :ஓஓஓஓ அந்த ஊறுகாய் மாமி அ பேஷா... போயிட்டு வரலாமே....
சைத்தாலி :இந்த கிண்டல் தான் ங்க எங்க போனாலும் உங்கள்ட மாறாது... ஆமா அது என்ன ஊறுகாய் மாமி???
YOU ARE READING
பனி விழும் இரவு 💏
Mystery / Thrillerசைதாலி ராகுல் புதுமண தம்பத்தினர்..... அவர்களின் காதல் கோவம் சின்ன சின்ன மோதல்... மற்றும் அவர்கள் புதிதாக வந்திருக்கும் இடத்தில் ஏற்படும் ஒரு பேரதிச்சியின் விளைவுகளே பற்றி முழுமையாக கூறும் கதை தளம்...