Episode 8

424 21 16
                                    

சைத்தாலி :சொல்லு மைதிலி.... உடம்பு இப்போ பரவலைய....

மைதிலி :ஆஹ்... எனக்கு என்ன.... எல்லாருக்கும் கஷ்டம் தர இருந்துட்டு தானே இருக்கேன்....

சைத்தாலி :ஹைய்.... நேத்து தானே சொன்னேன் இப்டி லாம் பேசத்தானு..... கஷ்டம் யாருக்கு தான் இல்லை... இப்டி பேசுனா எல்லாம் சரி ஆகிடுமா....

மைதிலி தன் கண்களை இறுக்க  மூடிக்கொண்டு தன் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தாள்....

மைதிலி :அதுவும் சரி தான் சைத்தாலி நம்ப இனிமே பேசிக்கவே வேணாம்.... அத சொல்லத்தான் உன்ன பாக்க வந்தேன்

சைத்தாலி :என்ன உளற நீ??

மைதிலி :நான் உளறலை உண்மையைத்தான் சொல்றேன்...

சைத்தாலி :ஓஓ இப்டி உன் கணவர் சொல்லச்சொன்னாரா???

மைதிலி :அவரு சொல்றது இருக்கட்டும் எனக்கும் அதான் தோணுது எங்க உன்கிட்ட நான் பேசி உன்ன இன்னும் காயப்படுத்திடுவேனோனு... அதுக்கு தான் என் கஷ்டம் என்கூட போகட்டும் இங்க பாக்குறவங்க எல்லாருக்கும் நான் தானே கெட்டவளா தெரிறேன்...அப்டியே இருந்துட்டு போறேன்.... இதுக்கு மேல என்கிட்டே எதுமே இல்லை இழக்க......

சைத்தாலி : நான் மறுபடியும் சொல்றேன் உன்ன பார்த்த அப்போவே எனக்கு தெரிஞ்சிது நீ குழப்பத்துல இருக்கனு.... மத்தவங்க உன்ன புரிஞ்சிக்கலான என்ன... உன் கணவர் இருக்காருல.... இப்போ நான் இருக்கேன் ல.. ஏன்... என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா நானும் எல்லாரும் மாதிரி உன்ன காய படுத்துவேன்னு  நெனைக்கிறியா மைதிலி....

உன்னை பாக்குறப்ப என்னோட தங்கச்சி பாக்குற மாதிரி இருக்கு.... அவ இப்போ என்கூட இல்லை... ஆன அவ இருந்துருந்த உன்ன மாதிரி தான் இருந்துருப்பா... உன் கண்ணு எனக்கு அவளைத்தான் ஞாபகம்படுத்துது....

என்ன உன் கூட பொறக்காத அக்கா வா நெனச்சிக்கோ.... எதுமே மனசுல இருக்குற வரைக்கும் தான் பாரமா இருக்கும் வெளில சொன்னதுக்கு அப்றம் மனசு லேசா ஆகிடும்.... புரிஞ்சிக்கோ....

பனி விழும் இரவு 💏Where stories live. Discover now