9

1.6K 65 18
                                    

நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி என்ற பாடலை இரவு கேட்டுக்கொண்டே இருந்த பிரஹலாத் நல்ல உறக்கத்தில் இருக்கும் தனது மனைவியை திரும்பி பார்க்க...

"நந்தினி ஐயம் வெரி சாரி....நந்தினி அப்படிங்கிற அந்த பெயர் ல அட்ராக்ட் ஆகி உன்னை கல்யாணம் பன்னினேன் ஆனால் ....இது வரை உனக்கென எதுமே செய்யல...சாரி..உன் மனசுலயும் ஆசை இருக்கும்ல...குழந்தை குட்டிலாம் பெத்துக்கனும் சந்தோஷமா வாழனும்னு...

விரைவில் அவளுக்கு முழு கணவனாக இருக்க தன்னை மாற்றி கொள்ள நினைத்தான்...உடனே மருத்துவமணையிலிருந்து அழைப்பு வந்தது....."டாக்டர்.... பிரஹலாத்??

ஆம் சொல்லுங்கள்...

சார் அவசரமா ஒரு பிரசவ கேஸ்...இங்க டாக்டர் யாரும் இல்லை சீக்கிரம் வாங்க என்று கூற...போனை வைத்துவிட்டு புறப்பட்டு சென்றான்.
அங்கு பிரசவ வலியில் ஒரு பெண் அலரிக்கொண்டிருந்தாள் தன் கணவன் தோள் மீது சாய்ந்து

அங்கு பிரசவ வலியில் ஒரு பெண் அலரிக்கொண்டிருந்தாள் தன் கணவன் தோள் மீது சாய்ந்து

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இதை பார்த்து மனசு படபடத்தது பிரஹலாத் க்கு. நர்ஸிடம் அந்த பெண்ணை லேபர் வார்டுக்கு கூட்டு வரச்சொல்லி எல்லா மருத்துவ உதவிகளையும் செய்தான்....பிரசவ முடிந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது.மயக்கம் தெளிந்து அந்த பெண் பிரஹலாத் இடம் "நன்றி.... சாமி மாதிரி வந்தீங்க" என் குழந்தைக்கு நீங்களே ஒரு பெயர் வைங்க என்று கேட்க.....சட்டுனு "நந்தினி "என பெயரிட்டான். காதலி நினைவுகளால் அல்ல....தன் உடன் வாழும் மனைவியின் நினைவால் அந்த பெயர் அந்த குழந்தைக்கு வைத்தான்.

இரவு பிரசவத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவன் தன் மனைவி தலையணையை கட்டி பிடித்தவாறு உறங்குவதை கண்டான்...அவளருகே செல்ல....அவள் நெற்றியில் அங்கும் இங்கும் அசையும் தலைமுடியை காதோரம் கோதிவிட்டு...அவள் பக்கம் திரும்பி படுத்தான்.

அவள் திரும்பி ..தூக்கத்தில் அவன் மீது கையை வைக்க...அவனுக்கு சிரிப்பு அடக்கமுடியாமல் கையை இன்னும் நெருக்கமாக அவனுடன் வைத்துக்கொண்டு உறங்கினான்.இதுவரை இல்லாத ஓர் நிம்மதியான உறக்கம் அவன் தழுவ...மணி 2 இருக்கும்.

திடிருனு இடிமழை.....இடிஇடிக்கும் சத்தத்தில் அவள் கண்விழிக்க...அவன் மீது கை இருப்பதை உணர்ந்து வெடுக்கென்று அவள் எடுக்க அவனும் விழித்துக்கொண்டு "என்ன நந்தினி இடி சத்தம் கேட்டது... அதான் பயந்து எழுந்தியா???😊

ம்ம்ம்... நல்லா தூங்கிட்டு இருந்தன் திடிருனு இடி இடித்தது.

கவலைபடாத நம்ப வீட்டு மாடியில் இடிதாங்கி இருக்கும். ஸோ நோ ப்ராப்லம்ஸ்... தைரியமாக தூங்கு... ஹாஹா

எனக்கு சின்னவயசுல இருந்தே இடினா அம்புட்டு பயம்ங்க...பயந்து எங்க அம்மாவை கட்டி பிடிச்சிருவேன்.

ம்ம்ம் இப்ப உனக்கு பயமா இருந்தா என்னை கட்டி பிடிச்சிக்கோ... ஓகேவா.

ஹாஹா... போங்க.

என்ன போங்க....???😊ஏன் என்கிட்ட இன்னும் உனக்கு அந்த சவுகரியம் வரலையா??

அப்படி இல்லை.....🙆

சரி சரி....நிம்மதியாக தூங்கு காலைல எழனும்ல...

மறுநாள் காலை கண்விழித்து பார்த்தால் அங்கு பிரஹலாத் இல்லை... இவள் போர்வையை விலக்கி தலையில் கொண்டை போட்டு எழுந்து வர....இரண்டு காபி கப்புடன் பிரஹலாத் வருவதை பார்த்தாள்.

ஏய்...என்ன பாக்குற???,இந்தா காபி..குடி.

நீங்க எனக்கு காபி???☺️

ம்ம்ம்... குடி உனக்கு தான்... அப்புறம் இன்னொரு விஷயம் காலைலயே எல்லாம் கிளம்பி விசேஷத்துக்கு போயாச்சு வீட்டில் இப்ப நீயும் நானும் ஸோ...டிபனும் நானே பன்னிடுரேன் போய் குளி நந்தினி.

ஏங்க இதெல்லாம் நீங்க பன்றீங்க???

என் நண்பி க்கு நான் பன்னகூடாதா என்ன??😊

ஹாஹா.... இப்ப கூட பொண்டாட்டி சொல்லமாட்டிங்கலா

ஹாஹா ...முடியாது சொல்லமாட்டேன்😕

போங்க ரொம்ப தான்... உங்களுக்கு...

சரி மை டியர் என்ன டிபன் வேணும் சொல்லு

பொங்கல்😁😁😁😁

ரைட்டு பொங்கிடுவோம்😀

தொடரும்.

உணர்வுகள் தொடர்கதைWhere stories live. Discover now