16

1.3K 54 2
                                    

நந்தினி யின் நெருங்கிய நண்பன் ஆகாஷ் அவளை பார்க்க வருகிறான். கல்யாணம் கூட வர முடியல சரி இப்போதாவது பார்த்துட்டு போலாமே னு வந்ததாக சொல்லி ....வீட்டுக்குள் நுழைகிறான். அவனது வரவை சற்றும் எதிர்நோக்கவில்லை நந்தினி.

நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படி டா தெரியும்??☺️

இது ஆடி மாசம் கண்டிப்பாக அம்மா வீட்டுக்கு வருவேனு தெரியும் அதான் வந்தேன்.

அப்படினா சரி ...என்ன சாப்பிடுற என்ன வேணும் என்று பேச்சை துவங்கினாள் நந்தினி.. சுபாஷினி ஜூஸ் எடுத்து வர உள்ளே சென்றாள்.நந்தினி யும் ஆகாஷும் ஒரே ட்யூஷன் ல ஒன்றாக படித்தனர் இருவரும் வேறு வேறு கல்லூரியில் தான் படித்தனர் ஆனாலும் நல்ல நட்புடன் இருக்க தற்போது அவன் சொந்தமாக ஷாப்பிங் மால் ஒன்று நடத்தி வருவதாக ஏற்கனவே கேள்விபட்ட நந்தினி.... அவனுக்கு வாழ்த்துக்கள் கூற. அவனும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொள்ள.

நந்தினி உனக்கு என்ன கிப்ட் வேணும் என்னுடைய ஷாப்பிங் மாலில் இருக்க பொருட்கள் எது வேண்டுமானாலும் செலக்ட் பன்னிக்கோ...வா கூட்டிட்டு போறேன்.

ஐயோ அதெல்லாம் வேண்டாம்.... நீ வந்ததே போதும்.

அட உன் கல்யாணம் க்கு எதுமே வாங்கிதராம எப்படி இருக்கமுடியும் ??என் ஷாப்பிங் மாலில் எல்லாம் விலையுரந்த பொருட்கள் தான் இருக்கும் தாராளமாக எடுத்துகாகலாம் என கூற.....

சுபாஷினி ஜூஸூடன் வந்தார்..."தம்பி எடுத்துக்க...

ஆன்டி நீங்க சொல்லுங்க...நந்து என் கூட ஷாப்பிங் மால் வரட்டுமா ??? அவளுக்கு கிப்ட் வாங்கி தரேன்.

அ...அது வந்து.... வேண்டாம் தம்பி கல்யாணம் ஆன பொண்ணு இன்னொரு ஆணோட இப்படி பப்ளிக் ப்ளேஸ்க்கு வந்தா நல்லாயிருக்காது. அவ எது ஆசைப்படுறாளோ அதை நீயே வாங்கிட்டு வந்து கொடுத்துரு .

அப்படினா சரிங்க ஆன்டி நான் கிப்ட் கொரியர் பன்னிவிடுறேன்...பை ஆன்டி ,பை நந்தினி.

ம்ம்ம் பை....

🐦🐦🐦🐦🐦🐦
ஆகாஷ் ஒரு பணக்காரன் ஆனால் அவனுடைய வாழ்க்கை ஒரு கேள்வி குறி...அவனுக்குனு ஆதரவா இருந்த அப்பாவும் இறந்துவிட்டார். இப்போ வீட்டில் ஒண்டிக்கட்டை தான்.

அவனுடைய நீண்ட நாள் வருத்தங்களை தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசையில் தான் ஷாப்பிங் மாலிற்கு அழைத்து செல்ல நினைத்தான் ஆனால் காலம் தடுத்துவிட்டது.
ஒரு காலத்துல ட்யூஷன் முடிந்து நந்தினி யும் அவனும் அரட்டை அடித்து கொண்டே வீடு வந்து சேருவர். அந்த கனாகானும் காலங்களை நினைத்து பார்க்க கண்ணீர் வந்தது.

ஒரு கட்டத்தில் இவன் அவளிடம் காதலை சொன்ன போதுதான் நிராகரித்தாள்..ஆனால் அதையும் அன்றோடு மறந்துவிட்டான். தற்போது நட்பை புதுப்பித்து கொண்டாலே போதும் என நினைக்கிறான்....

🦃🦃🦃🦃🦃

ஆடிமாதம் முடியும் நேரம்...இன்னும் இரண்டே நாள்கள்.... தன் ஆசை மனைவியை சந்திக்க அன்போடு காத்துக்கொண்டிருக்கிறான் . ஆனால் அச்சமயம் தான் சிங்கப்பூரில் மெடிக்கல் கான்பரன்ஸ் உள்ளது தவிர்க்க முடியாததும் கூட.....என்ன செய்வது அவள் இங்கும் வரும் நேரம் அவன் இங்கு இருக்கமுடியாதே😊சிங்கப்பூர் புறப்பட்டான்...அவளிடம் சொல்லிவிட்டு.

இரண்டு நாள் கழிந்தன.. மாமியார் வீட்டுக்கு வரவே அனிதாவுக்கு இவளை பழிவாங்க சரியான சந்தர்ப்பம். மாமியார் ஏசுவதற்கும் சரியான சந்தர்ப்பம்.

என்ன நடக்கும்???

தொடரும்

உணர்வுகள் தொடர்கதைWhere stories live. Discover now