😒

114 13 31
                                    

என் வலிகளை மாற்ற நல் வழியாக
என்னிடம் வந்த நீ இன்று
வலியோடு எனை
பிரிந்து போகிறாய்

என் வாழ்வின் வசந்தம் என
நினைத்த நீயோ இன்று என்
வாசல் வர தயங்குகிறாய்...

காதலோடு இருந்த நீ  இன்று
காற்றாய் என்னை கடந்து
செல்கிறாய்...

பாறையாய்  இறுகி இருந்த
என்னை சிற்பமாக
வடித்த நீயே இன்று எனை
சிதறவிட்டு செல்கிறாய்...

என் காயம் அனைத்திற்கும்
மருந்தாக இருந்த நீ இன்று என் காயத்தின் காரணமாகிறாய்...

பட்டம் போல் அழகாய்
வட்டமடித்த நம் உறவு இன்று
அறுந்து போகிறது
என் அழகான மனம்
நொந்து போகிறது உன் வார்த்தையால்.....

என் குறுச்செய்தி வரவில்லை
என்றால் உன் உள்ளம்
தாங்காது என்று நினைத்து விடாது தொடர்வேன் இன்று உன்னை எதிர்பார்த்து நான்

வார்த்தை வர மறுக்கிறது
கண்ணீரில் வலியோடு
பிறக்கிறது கவி....

இன்று மழையோடு
நனைய ஏங்குகிறேன் மகிழ்வோடு
அல்ல என் கண்ணீர் தடம்
எவரும் கண்டுவிட கூடாதென...

நினைவு முழுதும் நீயே
சிதறி கிடக்கிறாய் எந்த
எண்ணம் எழவில்லை
சருகாய் கருகி விட்டேன்

அழகான என் அன்பு
இன்று அவஸ்தை போல் தவிக்கிறது
உனக்காய் ஏங்குகிறது....

சிந்தையில் உன்னை பற்றிய சிந்தனை தான் இருக்கிறது  என் உறங்கும் நேரம் இன்று உறங்கா நேரம் துயில் எழும் நேரம்
துயில் கொள்ளும் நேரம்..

உன் சிறு விலகள் கூட
என்னால் தாங்க இயலாத
எனமறந்து போனாயோ..

இனியும் நான் இல்லை
உன்னை இம்சை செய்ய
உன்னோடு சண்டைபிடிக்க
நீ சிரிக்க நான் அகம் மகிழ
என் வார்த்தைகள்
உன்னை காயப்படுத்த
உன் மனம் நோக
உன்னை அன்பாலே அடிக்கும்
ஜீவன் உயிரற்று உயிர்
பிரிகிறது.....

உயிரின் ஓசை Where stories live. Discover now