🙃

22 6 2
                                    

மனம் வலிக்கிறது மயிலிறகாய் தீண்டிய உன் நினைவுகளை நினைக்கையில்...
கண்கள் குளமென நிறைகிறது என் விழி திறக்கையில் உன் முகம் தெரியாமல் போனதால்...
உதடு புன்னகை பூத்திட மறுக்கிறது அனைத்தும் நீ சொல்லியே சிரித்து பழகியதால்...
கால்கள் எட்டு வைக்க இடறி விழுகிறது உன் விரல் பிடித்தே நடந்து திரிந்ததால்...
பயணங்கள் வெறுக்கிறது உன் தோள் சாய்ந்து போன பயணங்களில் நீ இன்றி போகவேண்டும் என்பதால்...
மழையை கண்டால் துள்ளி குதித்த மனது இன்று மழையை வெறுக்கிறது சட்டென உன் நினைவு மனதுக்குள் நனைவதால்... ...
காலம் மட்டும் தான் கடந்து செல்கிறது  பட்டுப்போன மரத்தில் ஏனோ உன் நினைவு மட்டும் துளிர் விட்டுக்கொண்டே இருக்கிறது...

உயிரின் ஓசை Where stories live. Discover now