விழியன் ஆசையே.....
மூச்சின் சுவாசமே....
என்றும் நீயே....
எனக்காக நீயே....
நான் கொண்ட
ஏக்கத்தின் தீர்வே....
வாழ்வை வண்ணமாக்கிய
ஒற்றை உயிரே....
எங்கும் நீயே...
எதிலும் நீயே...
கண்ட கனவின் பலனே...
வாழ்வின் நிஜமாய் நீயே...
என் உயிரால் உனை வடித்தேன்...
உயிரோடு எனையே பார்த்தேன்...
என் தாய் கொடுத்த முத்தத்தை பெற மறுத்தேன்.....
எச்சில் ஒழுக நீ கொடுக்கும் முத்தத்தை உன் தாயாய் ஏந்தினேன்...
என் வாழ்க்கையின் தேடலே.... உனக்கான வானமாய் நானே....
நாலு காலில் நீ தத்தி நடப்பதை ரசித்தேன்...
வேக எட்டு வைத்து நடை போட வேணுமென நினைத்தேன்...
நொடி பொழுதில் மீண்டும் கருவில் உனை சுமக்க ஏங்கினேன்..
நெஞ்சத்தை பஞ்சுமெத்தையாய் உனக்காய் மாற்றினேன்....
உயிர் துடிக்கும் குருதியை உனக்காய் கொடுத்து உளமகிழ்ந்தேன்.....
சேலை தொட்டிலை விட்டு என் தோளை தொட்டில் ஆக்கினேன்.....
வெண்பஞ்சு கன்னக்குழியில்
உலகத்தை வென்று
கொடுத்த வீரன் நீ...
என் வெற்றிடத்தை நிரப்பி வெற்றியில் திளைக்க வைக்க போகும் என் பிள்ளை நீ......தாய்மை அடையாமலே தாயாக உணர வைத்த தாமரை அவர்கள் வரிகளை கேட்டு எழுந்த என் வரிகள்...