சும்மா அம்மாவின் பாசம் சில பிள்ளைகளின் ஏக்கம் ஒரு பிள்ளையாய் நான் எழுதினேன்.....பத்து மாசம் சுமந்தவளே..
பாசம் மட்டும் தெருஞ்சுவளே..
பாய்விரிப்பு இல்லையென
சேலை தலைப்பு விரித்தவளே..
தாலாட்டு பாடியவளே
உள்ளங்கை தங்கத்தட்டில் தாங்கியவளே..
உறக்கம் பல தொலைத்தவளே
எனை உயிரோடு அடைத்தவளே ..
சீராட்டி வளத்தவளே
பூப்போல காத்தவளே..கண் திறந்து உன் பிள்ளையை பாரம்மா..
என் கண்ணீரை உன் கரம் கொண்டு துடைத்திடமா...
கடன்வாங்கி எனை கரைசேர்த்து
தூக்கிவிட்டியேம்மா...
பாவி மக எனை கடன்காரண விட்டுப்புட்டு தூங்கிட்டியேம்மா.. ..
ஆகாசத்தை தாண்டியும் எனக்கு நீ செஞ்சியெம்மா..
என் ஆசைக்கு கூட உனக்கு ஒன்னும் செய்யவிட செய்திட்டியம்மா..
பக்கத்தில் இருந்தால் படிக்கமாட்டேனு பட்டணம் அனுப்புனீயேமா..
பட்டம் வாங்கிபுட்டேன் அதை நீ பார்க்காம இருக்கியேம்மா....
அம்மா உன் மடிசாய வேணுமம்மா
எனை மார்போடு அணைத்திடம்மா..
துன்பப்பட்டு துயரப்பட்டு கஷ்டப்பட்டு கஷ்டமெல்லாம் துரத்திவிட்டு வளத்தியேம்மா..
இன்னைக்கு துன்பமில்லை துயரமில்ல கஷ்டமில்லை நஷ்டமில்லை தாயே நீயின்றி வாழ்க்கையும் இல்லையேம்மா...கால்வாயித்து கஞ்சி குடுச்சு எனக்கு பசியில்லாம வளத்தவளே..
பட்டினியா பாத்ததில்லை அப்போ உனை பத்தி நெனச்சித்தில..
கண்ணுறுக அழுகுறேண்டி உன்ன காணும்னு தவிக்குறேண்டி..
பட்டு துணி நான் உடுத்த தாயே நீ ரசிச்சியேம்மா ..
பச்சஓலை நான் கட்டி தாயே இன்னைக்கு நான் தோத்தேனம்மா...
கள்ளமில்லா பாலை
கொடுத்தவளத்த தாயே....
எனைய பால் ஊத்த கூட விடவில்லையே நீயி..
உன் ஆசையெல்லாம் விட்டுறேஞ்ச தாயே..
இப்போ அனலுக்குள்ள வேகுறியேம்மா...
அத கண்டு நான் உயிரோடு சாகுறேம்மா...