உலகில் எதிரியே இல்லை என்றிருந்தேன் இன்று என் இதயமே எனக்கு எதிரியாய்....
இரக்கமில்லா இந்த இதயம் எனை முழுதும் மறந்து உனையே நினைத்து துடிக்கிறது .. ...
என் நினைவுகள் முழுதும் நீயே நிறைந்திருக்கிறாய் எல்லாம் மறந்து சென்றாய் ஏற்றுக்கொள்கிறேன்...
எனை வெறுத்துவிட்டதை உணர்கிறேன் முழுதும் விட்டு விலகி வெறுத்துவிடு....
அறுத்துப்போட்டது போல் தவித்து துடிக்கும் என் இதயம் ஒரே நாளில் அடங்கி ஒடுங்கட்டும்...
என் உயிரே உணர்வோடு உணர்ந்து கொண்டேன் உனக்கு இடைஞ்சலாய் இருப்பதை.....
ஒதுங்கி போகிறேன் உன் உள்ளத்தில் நான் இல்லை என்றுணர்ந்து இனி மறந்தும் என் கண் முன் வந்துவிடாதே மீண்டும் இரக்கிமில்லாமல் என் இதயம் துடிப்பதை ஏற்க மனமில்லை என்னிடம்.....
இடைவெளி இன்றி சுற்றி திரிந்தோம் எப்படி வந்தது இந்த இடைவெளி
இதே சிந்தனையிலே கரைகிறது என் சிந்தை முழுதும்...
உள்ளுக்குள் உடைந்து அழும் என் இதயம் பற்றி என்றும் நீ உணரப்போவதில்லை......
உனை நினைக்க வேண்டாம் என நினைத்தே என் நினைவு முழுதும் நீயே நிறைந்து கொண்டு போகிறாய்...