அப்பா எனக்கு பயமா இருக்கு. யார் பா அவுங்க ஏன் நம்ம வீட்டு கதவை இவ்ளோ வேகமா தட்டுறாங்க? -- கயல்
தெரில மா... இரு கதவை திறந்து பாக்குறேன் -- அப்பா
வேண்டாம் அப்பா... எனக்கு ஏதோ தப்பா படுது -- வித்யா
சரி மா, நீ போயி ஊர்ல இருக்கற போலீஸா கூப்பிட்டு வா மா -- அப்பா
சரி பா -- வித்யா
வித்யா போய்ட்டு வந்து பார்த்தா அவுங்க அப்பாவும் தங்கச்சியும் இறந்துட்டாங்க... அவ ஒடஞ்சி போய்ட்டா.... அப்போ அந்த பக்கமா போன ஒரு பொண்ணு வந்து அவகிட்ட நீ வித்யா தான கவலை படாத நான் உன்னை பாத்துக்கிறேன்... வா நம்ம வீட்டுக்கு போலாம், என்னை உனக்கு தெரியாது பட் உன்னை எனக்கு தெரியும். வா போலாம்... இங்க இருக்க வேண்டாம்... நா போலீஸ் கிட்ட சொல்லிட்டேன்.
அவ இருந்த நிலைமையில வித்யா எதுவும் சொல்லமா அந்த பொண்ணுகூட போய்ட்டா.