4

69 6 0
                                    

அடுத்த நாள் காலைல சீக்கிரமே எழுதிட்டேன். நைட் எல்லாம் தூக்கமே வரல. கொஞ்சம் பயமாவே இருந்திச்சு. சீக்கிரமா கிளம்பிட்டு சாமி கும்பிட ஆரம்பிச்சிட்டேன். என்னை அன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க. எனக்கு கொஞ்சம் பயமும் கொஞ்சம் சந்தோஷமாவும் இருந்திச்சு.

அம்மா எனக்கு புது டிரஸ் குடுத்தாங்க. நான் அதை போட்டுகிட்டேன். அப்போ திவ்யாவும் என்னோட தங்கச்சி ஸ்ரேயாவும் என் ரூமுக்கு வந்து என்னை கிண்டல் பண்ணிகிட்டே எனக்கு கொஞ்சம் மேக்கப் போட்டுவிட்டாளுங்க.

ஹே அக்கா ரொம்ப வெக்கப்படாத, முடியல... கொஞ்சம் கொறைச்சிக்கோ -- ஸ்ரேயா

அடி வாங்க போர - ஸ்ருதி

சரி நீங்க ரெண்டு பேரும் போங்க நான் அவுங்க வந்ததும் வெளிய வரேன் -- ஸ்ருதி

இங்க என்ன பண்ற இந்த நேரத்துல? யாரவது பார்த்தா பிரச்சனை ஆகிடும்ல? இங்க இருந்து போ.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்...- ஸ்ருதி

மா ஸ்ருதி வாமானு ஸ்ருதியோட அம்மா கூப்டாங்க... உடனே அவளும் படபடப்புடன் கதவை திறந்திட்டு உள்ளே திரும்பி திரும்பி பார்த்திட்டு வெளியே போனாள். பயப்படாத மா வா போலாம்னு அவுங்க அம்மா அவளை கூப்பிட்டு போனாங்க.

வெளியே போயி பார்த்தா மாப்பிளை மட்டும் தான் வந்து இருக்காரு. ஸ்ருதி ரொம்ப வெட்கபட்டா. வீட்ல எல்லாரும் அவுங்க ரெண்டு பேரும் பேசட்டும்னு கிளம்பிட்டாங்க.

அதை கூட ரெண்டு பேரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சும்மா பார்த்து கிட்டே இருந்தாங்க. அப்போ ஸ்ரேயா வந்து வேணும்னே சத்தமா போன் பேசுற மாதிரி சத்தம் போட்டுட்டு போனால். அப்புறம் தான் ரெண்டு பேரும் சுத்தி முத்தி பார்த்திட்டு பேச ஆரம்பிச்சாங்க. மாப்பிளை அவரோட பெயர் மஹினு சொல்ல ஆரம்பிச்சாரு. அதுக்குள்ள எல்லாரும் திரும்ப வந்துட்டாங்க. ஆனால் ரெண்டு பேரும் எல்லார் முன்னாடியும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க.

இதை எல்லாத்தையும் இரு கண்கள் ரொம்ப கோபத்தோட பார்த்துகிட்டு இருக்கு... அது யாரு? ஏன்?

யார் அது??Where stories live. Discover now