என்ன இது அவன் என்னை சுத்தமா மறந்துட்டானா? இல்லை நடிக்கிறானா? கண்டுபுடிக்கணும். இன்னிக்கு இரவு அவனுக்கு இருக்கு..... -- X1
மஹி அவனோட ரூம்ல உக்காந்து பாட்டு கேட்டுட்டு இருந்தான். அப்போ திடீர்னு அவன் பின்னாடி ஏதோ வந்து வந்து போற மாதிரி தோணுச்சு.. புது இடம் இல்லையா அவனும் பயந்துகிட்டே திரும்பி பார்த்தான். அங்க ஒரு உருவம் அவனை பார்த்து சிரிச்சிட்டு மறைஞ்சு போயிருச்சு. இதே மாதிரி ஒரு வாரம் தொடர்ந்து நடந்திச்சு... அவனும் இதை யாருகிட்டயாவது சொன்னா அசிங்கமா ஆகிடும்னு சொல்லாம இருந்தான். அன்னைக்கு இரவு அந்த உருவம் பக்கத்துல வர மாதிரி இருந்திச்சு. அதுனால அடுத்த நாளே இதை பத்தி ஸ்ருதிகிட்ட சொன்னான். அவளும் ஒன்னும் இல்லை சரி ஆகிடும்னு சொல்லி வச்சா.
அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு உண்மையாவே மஹி நல்லவரா கெட்டவரான்னு உக்காந்து யோசிச்சிட்டு இருந்தா ஸ்ருதி.
அப்போ அங்க வந்த மஹி வாங்க ஸ்ருதி நாம்ப போயி என்னோட தம்பிய கூப்பிட்டு வரலாம்னு சொன்னான். பயப்படாதீங்க உங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன்னு சொல்லி அவள் கையைபுடிச்சு கூட்டிட்டு போனான். அப்போ ஸ்ருதிக்கு இவன் ரொம்ப நல்லவன்னு மனசுல திடீர்னு தோனுச்சு. அவளும் கொஞ்சம் சந்தோஷமா போனால்.---------------------------------------------------------
ரயில்வே ஸ்டேஷனில் அவளுக்கு காத்து இருந்த அதிர்ச்சி என்ன? பார்ப்போம் அடுத்த பதிவில்...