மத்தியான நேரம் சென்னையோ பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது .தியேட்டர் எங்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது....
மருத்துவமனையில் அடுக்கடுக்காக ஆம்புலன்ஸ்கள் வந்து இறங்கிய வண்ணம் இருந்தன...
கடற்கரையை ஓசையில் கலந்துவிட்ட சுண்டல் வியாபாரியின் கூக்குரலும்,, பறவைகளின் கீச்சலும்,, எந்தப் பக்கம் பார்வையை போனாலும், புகையை கக்கிக்கொண்டு பறக்கும் வண்டிகளும்,, வானைப் பிளக்கும் ஒலிகளும்,,, புழுதி படிந்த வெளிகளில்,, சென்னை பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது....
சுட்டெரிக்கும் வெயில் மண்டையை பிளக்க மத்தியான நேரம் ஆயிற்றே!!!!!
வயிற்றுக்குள் எதையாவது கொட்டி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சூடு பறக்க வந்த அருண் திடுமென குளியலறைக்குள் புகுந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தான்...என்னதான் நவீன காலத்தில் ஏசி என்று நமது உடலை குளிர்விக்க வந்தாலும் கொட்டும் வியர்வையில் தண்ணீரில் தன்னை நுழைப்பதில்
அலாதி சுகம் போலும் !!!!
என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு
நனைந்து கொண்டிருந்தான்....
இத்தனைக்கும் சமையல் அறையில் தன் கணவனுக்காக பார்த்து பார்த்து சமைத்து தயாரித்துக் கொண்டிருக்கும் நீலாவுக்கு கணவர் வந்தது பற்றி ஒன்றுமே தெரியாது....