2.

400 18 7
                                    

இரவு மணி 11 . 30 . இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்தின் மணிக் கட்டில் ஒளிர்ந்த சிடி 2 டிஜிடல் வாட்ச் ரத்த நிற எண்களில் நேரத்தைக் காட்டி விட்டு விநாடிகளைத் தின்ன ஆரம்பித்தது . கான்ஸ்டபிள் கொண்டு வந்து . வைத்த மூலைக்கடை நாயர் டீயை ஒரு வாய் உறிஞ்சி விட்டு டீயிலிருந்து அடிக்கிற நாற்றம் மண்ணெண்ணெய் நாற்றமா . . . இல்லை சீயக்காய் நாற்றமா என்பதைக் தீர்மானிக்கும் முன்பு மேஜையின் மேலிருந்த சாயம் போன அரசாங்க டெலிபோன் தன் தொண்டையைத் திறந்தது , அது ' ர்ர்ர்ர் ' ரிங்கிய விதம் விநோதமாயிருந்தது . ' கர்ர்க் . . . கர்ர்க் . . . ' டீ டம்ளரை நகர்த்தி வைத்து விட்டு ரிஸிவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தார் கோகுல்நாத் . " ஹலோ . . . " மறுமுனையில் ஒரு வயோதிகக் குரல் பதட்டமாய் கேட்டது : " ஹலோ . . . போலீஸ் ஸ்டேஷன் . . . ? " " எஸ் . . . " " இன்ஸ்பெக்டர் இருக்காரா . . . ? " " ஹோல்டிங் . . . " " மிஸ்டர் இன்ஸ்பெக்டர் . . . ஐ யாம் கோபால் . சென்னை பீச் ரோட்ல இருக்குற பணிக்கர் கெஸ்ட் ஹவுஸிலிருந்து பேசறேன் . . . " கோகுல் நாத் ஆச்சர்யமானார் . குரலுக்கு ஒரு மரியாதையைக் கொண்டு வந்து கேட்டார் ; " சொல்லுங்க ஸார் . . . ! எனி திங்க் இம்பார்ட்டெண்ட் . . . ? "

" நீ . . நீ . . . நீங்க உடனடியா கெஸ்ட் ஹவுஸுக்கு வர முடியுமா இன்ஸ்பெக்டர் . . . ? மேட்டர் ஈஸ் அர்ஜெண்ட் . . . " " என ன விஷயம் ஸார் . . . ? தெரிஞ்சா நான் சில முன்னேற்பாடுகளோடு வர வசதியா இருக்கும் . . . பூரா விவரத்தையும் சொல்ல வேண்டாம் . ஜஸ்ட் ஒரு ஹிண்ட் கொடுங்க . . . தட் வில் . . . இனப் . . . " " கெஸ்ட் ஹவுஸ்ல இப்போ நான் மட்டுந்தான் இருக்கேன் இன்ஸ்பெக்டர் . . . என்னோட ரூமுக்கு நேர் பக்கத்து வீட்டு மாடி ரூம்ல யாரோ அலர்ற சாமான்கள் உடைகிற சத்தம் கேட்குது . . . என்னோட வீட்டு மாடி ரூமுக்குப் போய்ப் ஜன்னல் வழியா பாக்கலாம்னு போனா என்னோட ஜன்னலுக்கு பக்கத்திலேயும் நிழலாடற உருவம் தெரியுது.....

 என்னோட வீட்டு மாடி ரூமுக்குப் போய்ப் ஜன்னல் வழியா பாக்கலாம்னு போனா என்னோட ஜன்னலுக்கு பக்கத்திலேயும் நிழலாடற உருவம் தெரியுது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
😲***எட்டாவது எச்சரிக்கை😨Where stories live. Discover now