பணிக்கர் பங்களாவை தேடும் முயற்சியில் தன்மேவாயை தடவிக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்களுக்கு சட்டென்று அது மாட்டியது.....
''
மதிலில் இருட்டிலும் மின்ன கூடிய தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஏதோ ஒரு ஆங்கில வசன கோர்வை ஆமாம் அதனைப் படிப்பதற்குள் அவன் இதுதான் பணிக்கர் பங்களா என்றே உறுதி செய்து விட்டான்....
உடனே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனாக இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் இன் பக்கம் திரும்பி "நாம போக வேண்டியது இந்த பங்களாவுக்கு தான் சார்" என்று ஆணித்தரமாகக் கூறும் விஷ்ணுவை பார்த்த கோகுல்நாத் ஒன்றுமே புரியவில்லை ....
எப்படி மிஸ்டர் விஷ்ணு இவ்வளவு உறுதியா சொல்றீங்க????அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது கோகுல்நாத் அந்த மதில பாருங்க.... ஏதோ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கு...... மிகுதி எழுத்துக்கள் நமக்கு இந்த இரவுல விளங்கவில்லை ....ஆனா,,,,
அதனோட முதலெழுத்து F என்று நன்றாக விளங்குது பாருங்க.....
அதை வைச்சுத்தான் என்று கூறினான் அதற்கு கோகுல்நாத்,,,,"இல்ல மிஸ்டர் விஷ்ணு இங்க இந்த தெருவுல இரண்டு மூன்று வீடுகள் பணிக்கர்(faniker), பிரேசியஸ்(fresious) அந்த மாதிரி பெயர்கள் கொண்டு இருக்கு.....
நாம தப்பான வீட்டுக்குப் போய் இந்த நேரத்தில அவங்கள குழப்பிடாம இருக்கணும்....
இரண்டு மூன்று வீடுகள் எல்லாம் இந்த லெட்டரில் தான் ஆரம்பிக்குது மிஸ்டர் விஷ்ணு......
'
தெரிந்து கொண்டும் சலனத்தை முகத்தில் காண்பிக்காதவாறு உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்றை விடுத்தான் விஷ்ணு.... அந்தப் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.
" மிஸ்டர் கோகுல்நாத் உங்களுக்கு நான் கிரைம் பிரான்ச் ஆபீஸர் என்றது நல்லாவே தெரியும் அப்படி இருந்து கொண்டும் என் கண்களுக்கு எந்த ஒரு சிறு தடயம் கூட தப்பிவிட முடியாது என்றும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்"" நான் இதுதான் பணிக்கர் கெஸ்ட் ஹவுஸ் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கு" என்றவனை இரண்டு விழிகளும் வெளியே தள்ள ஆச்சரியமாய் பார்த்தார் கோகுல்நாத்....