"ஒருமைத்தன்மை" அன்பை வெளிப்படுத்துவதற்தான திறனை பலப்படுத்தும். நீங்கள் "எல்லமே நான் - நான் - நான்" என்று நினைத்தீர்களானால் பக்தியைக் கொண்டாடும் திறனை இழந்துவிடுவீர்கள்.
மாயைக்கு மாற்று மருந்து பக்தி!
மாயைக்கு மாற்று மருந்து லீலை!
உங்களை மிகைப்படுத்திக் காண்பித்துக்கொள்வது உங்களால் என்பது தவிர்க்கமுடியாதது. உங்களால் அதை உங்களுக்குள் இருந்து அழிக்கவே முடியாது. நான் சவால்விடுகிறேன்.. ஒரு 10 நிமிடத்திற்கு, உங்களுடைய ஏதாவது ஒரு உரையாடலைப் பதிவுசெய்து கேட்டுபாருங்கள், நீங்களே பார்க்கலாம் அதில் மிகைப்படுத்துதல் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும், சில நேரங்களில் எதிர்மறை உணர்வாகவும் வெளிப்படும். நீங்கள் ஒருவரை வெறுப்பீர்களானால், அவரைப்பற்றி நீங்கள் தவறாக எதிர்மறையான மிகைப்படுத்துவீர்கள்!.
யாரெல்லாம், "என் வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் செயல்களில் மிகைப்படுத்துதல் என்பது என்னுடைய இஷ்ட தெய்வத்தை அல்லது குருவை மையப்படுத்தி மட்டுமே இருக்கும்" என்று ஆழமாக தீர்க்கமாக முடிவெடுக்கின்றீர்களோ. நீங்கள் அனைவரும் ஞானத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள்!.
விழித்துக்கொள்ளத் தயாராகுங்கள்!. உள் திரும்பிப் பாருங்கள்! அது தான் சதாசிவன் உங்களி மீது வைத்திருக்கும் காதல், அவைதான் சதாசிவனின் அன்பின் ஓட்டம்!.
"என்னை யார் விழிப்படையச் செய்தார்களோ, யார் எனக்கு உயர்நிலையை அனுபவமாக்கினார்களோ சரியாக அவர்களை மட்டுமே நான் நினைப்பேன்" என்பதில் நான் துவக்கத்திலிருந்தே மிகத் தெளிவாக இருந்தேன்!. "நான் யார்" எனும் உயர்ந்த சத்தியத்தை நான் பயிற்சிசெய்து கொண்டிருக்கும்பொழுது, அதை எனக்குள் விழிப்படையச் செய்த அண்ணாமலை சுவாமிகள்தான் எனக்கு உயர்ந்தவர். அப்பொழுது அவரே எனக்கு பிரபஞ்சம். அதைத் தவிற வேறு ஒன்றும் இல்லை. அதேப்போல் எப்பொழுதெல்லாம் அருணகிரியோகீஸ்வர் கற்பித்த ஒன்றைப் பயிற்சி செய்கிறேனோ அப்பொழுது அவர்தான் எனக்கு எல்லாமே!. அவர்தான் பிரபஞ்சம்!. மாதா விபுதானந்தபுரி தேவி, ரகுபதியோகி இவர்கள் கற்பித்த ஒன்றைப் பயிற்சிசெய்யும்பொழுது, அவர்கள்தான் என் பிரபஞ்சம். அவ்வளவுதான்!.
YOU ARE READING
சதாசிவனின் அன்பின் ஓட்டம்!
Spirituale"ஒருமைத்தன்மை" அன்பை வெளிப்படுத்துவதற்தான திறனை பலப்படுத்தும். நீங்கள் "எல்லமே நான் - நான் - நான்" என்று நினைத்தீர்களானால் பக்தியைக் கொண்டாடும் திறனை இழந்துவிடுவீர்கள். மாயைக்கு மாற்று மருந்து பக்தி! மாயைக்கு மாற்று மருந்து லீலை! உங்களை மிகைப்படுத்...