காலை நேரத்தில் கதிரவன் தனது கைகளை விரித்துக் கொண்டு வெளியே வந்தான். ஊர் மக்கள் அனைவரும் அந்த மாளிகை வீட்டில் நிறைந்திருந்தனர். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடித்திரிய,
ஐயர்" சுந்தர் ரம்யா தம்பதியினரின் தவப் புதல்வனான சித்தார்த்திற்கும் வேலன் லக்ஷ்மி தம்பதியினரின் புதல்வி ஜானகிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்படுகின்றது." என்று கூறி நிச்சயத்தட்டு மாற்றப்பட்டது.
இருவரின் காதல் வெற்றி பெற்றதை எண்ணி மணமக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் ஜானகி என்கிற ஜானு மட்டும் இன்பக்கடலில் மூழ்கி இருக்க, மணமகனின் மனதோ எரிமலை போல கோபத்தில் குமுறிக் கொண்டு இருந்தது. தனது அறைக்கு வேகமாக வந்தவன் தான் அணிந்திருந்த மலர் மாலையை கழற்றி வீசி எரிந்தான்.
தன் நண்பனான கௌதமிடம் " டேய் என்ன சுத்தி என்னடா நடக்குது? யேன்டா நான் சொல்றத யாருமே நம்பமாட்டேன்றாங்க? நான் நா தானாங்குறது என்ன சுத்தி நடக்குறத பாத்தா டவுட்டா இருங்கு டா! நான் நெஜமா யாரடா காதலிச்சன்? " என்று உயர் தொனியில் கத்தத் தொடங்கியவனின் குரல் தாழ் தொனியில் அழுகையுடன் முடிவுற்றது.
தனது நண்பன் எதற்கும் கலங்காத தைரியமான அஞ்சா நெஞ்சம் கொண்ட ஆண் சிங்கம். ஆனால் தற்போது அவனின் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றான் கௌதம் .
" டேய் நான் உண்மயாவே இவள காதலிக்கவே இல்லன்னு ஒனக்கும் நல்லாவே தெரியம் டா. நான் காதலிச்சது என் ஜானுவடா. இவள இல்ல. அப்போ இவ தான் உண்மயான ஜானகின்னா அவ யாரு? அவ பேர் என்ன? அவ எங்கிருக்கா? அவ எதுக்கு என்கிட்ட பொய் சொன்னா? " என்று மனதில் உள்ள கேள்விகளை கேட்டு கௌதமிடம் புலம்பத் தொடங்கினான், நம் கதாநாயகன் சித்தார்த் என்கின்ற சித்து.
YOU ARE READING
உன்னில் என்னை தொலைத்தேன் (முடிவுற்றது)
RomanceHighest ranks..... 28.10.2019 - 2.11.2019 revenge #1 28.10.2019 - 8.11.2019 emotional #2 1.10.2019 - today நகைச்சுவை #1 1.11.2019 life #3 2.11.2019 action #1 11.11.2019 வலி #4 19.11.2019 romance #5 த...