இரண்டு நாட்கள் கழிந்தன. ஹீரோவும் நடக்கும் அளவுக்கு தேறியிருந்தான். இருந்தாலும் கொஞ்சம் கெந்தி தான் நடக்க வரும். குரலும் வந்தது
"என்ன நண்பா நலமா.. "
"நலம் தான்.. நலம் தான்.. "
"சரி சொல் எப்படி கொல்வது? "
"நீ மாட்டினது சரி தான். அவனை சும்மா போய்லாம் குத்த முடியாது. பாதுகாப்பு ரொம்ப பலமாம். "
"ஆமாம் மேலே சொல் "
"எனக்கென்னமோ அவனை நீ மட்டும் தான் கொல்ல முடியும்னு தோனுது "
"அதெப்படி?? " அரசனே ஆச்சரியப்பட்டான்
"நீ கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் சொல்லணுமே.. "
"எதுவானாலும் கேள் சொல்கிறேன் "
"ஒருத்தர் உடம்புக்குள்ள போய்ட்டு எவ்ளோ வேகமா வெளிய வரமுடியும் உன்னால? "
"அரை நொடியில் வந்துவிடுவேன் "
"அப்போ அவன் உடம்புக்குள்ள புகுந்து தான் கொல்ல போற. விளக்கமா சொல்றேன். அவனுக்கு சொந்தமான கட்டடம் 12 மாடி. Illegal அதாவது சட்ட விரோதம். சிட்டி கு வெளிய கட்டிட்டு இருக்கான். அங்க போகும் போதெல்லாம் அந்த 10வது மாடில இருந்து அவன் ஊரை பாக்கறது வழக்கம். அப்போ அவன் உடம்புக்குள்ள புகுந்து கீழ குதிச்சிட்டு பாதியில வரணும். முடியுமா? "
அரசன் நிஜமாகவே ஆச்சரியப்பட்டான். எல்லாம் அறிந்தவனான தனக்கே இது தோன்றவில்லயே என எண்ணினாலும்
"சரியாக சொன்னாய்.. செய்து விடுகிறேன். " பறந்து ஓடினான் அரசன்.
மறுநாள்
"பிரபல தொழிலதிபர் காண்ட்ராக்டர் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை "
என செய்தியில் வந்தது. ஹீரோ சிரித்துக்கொண்டான்.
(முற்றும்... )