அன்று இரவு ஹீரோ இருந்த அதே ஆஸ்பத்திரியில் இருந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு இளைஞன் ஒரு காலி ஊசியை கையிலெடுத்து வெளியே கிளம்பினான். ஏனோ நோயினால் வரும் பலவீனம் அவனிடம் தென்படவில்லை. நல்ல வேகத்துடன் கிளம்பி அருகில் இருந்த அரசு மருத்துவமனை டாக்டர் வீட்டை நோக்கி நடந்தான். சுவர் ஏறி குதித்து டாக்டர் வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே அரசு மருத்துவர் நல்ல மது மயக்கத்தில் வீட்டின் ஹாலில் சோபாவில் படுத்து இருந்தார். ஊசியில் காற்றை நிரப்பி கழுத்து நரம்பில் காற்றை ஏற்றினான். சத்தமில்லாமல் உயிர் பிரிந்தது. அதே ஊசியால் ரத்தத்தை உறிஞ்சி தரையில் "மருத்துவன் வேடத்தில் வியாபாரி" என எழுதினான். கீழே சரிந்து விழுந்து இறந்தான். போலீஸ் விசாரணையில் அந்த டாக்டர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மீது சட்டவிரோதமாக பரிசோதனைகள் நடத்தியது தெரியவந்தது. கொலைகாரன் புற்றுநோயால் இறந்தான் என வழக்கு மூடப்பட்டது.
(முற்றும்...)