4

404 12 1
                                    

"என் பொன்னை உங்க கூட அனுப்ப விருப்பமில்லை அவ்வளவு தான் உங்க புள்ள இல்லாத வீட்ல என் பொன்னு வந்து என்னங்க பன்னபோறா அவளே பழையது எல்லாம் மறக்க முயற்சி பன்னிட்டு இருக்கா என்று ஜானுவின் மாமியாரிடம் போனில் வாதாடிக்கொண்டிருக்க ...
"அட உன் பொன்னு ஏதோ ஒரு பையனோட சுத்திகிட்டு திரியுறா இதுக்கு ஆத்தாக்காரி நீயே சப்போர்டா இங்க பாரு உன் பொன்னு என் மருமக அவ்வளவு தான். என் வீட்டுக்கு ஒழுங்காக அனுப்பி வச்சிரு வைதேகி என்றபடி போனை துண்டிக்க வைதேகியிற்கு அதிர்ச்சியாக இருந்தது இது என்ன புதுசா ஏதோ சொல்றாங்க நம்ப பொன்னு ஜானு ஏதோ ஒரு பையன் கூட சுத்துறாளா???இருக்காதே ...இதை எப்படி அவகிட்ட கேக்குறது??? பேசாம கொஞ்ச நாளைக்கு மாமியார் வீட்டுக்கு அவளை அனுப்பி வைப்போமா????ஏன்னா காலம் கெட்டுபோயிருக்கு யார் கூடவாச்சும் சுத்தி மனசை கெடுத்துகிட்டு ஒன்னுகிடக்க ஒன்னு ஆகபோது.

ஏய் ஜானு இங்க வா.....

என்னம்மா??

நீ போய் உன் மாமியார் வீட்ல கொஞ்ச நாள் இரு .

அதெல்லாம் என்னால முடியாது நான் ஏன் அங்க போகனும் மறுபடியும் அந்த கிழவி பன்ற கொடுமையை விலைகுடுத்து வாங்கிட்டு வரதுக்கா போமா என்னால முடியாது. என்றதும் அவளருகே சென்று தோளில் கைவைத்தபடி "செல்லம் இங்க பாரு உன் நல்லதுக்கு தான் சொல்றேன். நீ அங்க போய் நிரந்தரமாக இருக்க சொல்லல டா கொஞ்ச நாள் அங்க இரு. கையோட ஒரு வேலைக்காரி யை உன்கூடவே அனுப்புறன் அவ உன்னை பார்த்துப்பா..இங்க சாப்பிடுறத அங்க சாப்பிடு இங்க தூங்குறத அங்க தூங்கு ப்ளீஸ் கொஞ்ச நாள் இரு.

ஏன்மா இப்படி அடம்பிடிக்கிற ???😢

இங்கபாரு உன் மாமியாரும் உன்னை கூப்பிட்டுகொண்டே இருக்கு அதுக்கு பையன் இல்லாத கவலை வேற இப்ப அவங்க தனியா இருக்கிறதுனால உன்னை கூப்பிடுது நீ போகல னா இதையே சாக்கா வச்சு ஊரெல்லாம் தப்பா பேசிட்டு திரியும் நீ இப்படி  அப்படினு. அதுக்கு நீ கொஞ்ச நாள் அவங்களோட தங்கிட்டு எதாவது சாக்கு சொல்லிட்டு வந்திடு என்ன ஓகேவா???

காதல் கண்கட்டுமோWhere stories live. Discover now