2

44 2 1
                                    

உள்ளே சென்ற அருள் அறையை விட்டு வெளியே வந்தான். "என்னடா அருள் ரொம்ப நேரமா உள்ளவே என்னடா பன்னிட்டு இருந்த?"என்ற தாய் மகாலட்சுமியின் கேள்விக்கு பதில் அளிக்க முற்பட்டபோது அவனுடைய கைப்பேசி அழைத்தது.

எதிர்முனையில் அவனுடைய தோழன் ஒருவன்"மச்சி என்னடா ஏதோ பொண்ணு பார்த்துருக்காங்க னு கேள்விபட்டேன்"என்று கேட்க அவன் முழித்துக்கொண்டே "யார் மச்சி உனக்கு சொன்னது"? என்று கேட்க
அவன் சிரித்து கொண்டே எல்லாம் உங்கள் அப்பா தா சொன்னார் உனக்கு கல்யாணம் னு பேச்சு எடுத்தாலே பாவக்காய் சாப்பிடுற மாதிரி தானே அதான் உன்கிட்ட பேசி புரியவைக்க சொன்னாரு....இங்கே பாரு அருள் உனக்கு பொண்ணை பிடிக்கல பிடிக்குது அதை தாண்டி முதல்ல பொண்ணு பார்க்க போவோம் பிடிச்சிருக்கானு பாரு. என்று கூற சற்று யோசித்து விட்டு "அதுவும் சரி தான் எதுக்கும் அந்த பொண்ணை தனியாக போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துருவோம்"என்று கூற..

"அதுக்கூட அந்த பொண்ணுக்கு தெரியாது போய் பார்க்கனும் மச்சி அப்பதான் நல்லாருக்கும். முதல்ல நீ பார்த்து பிடிச்சுபோனா அதுக்கப்புறம் பெரியவங்க கூட போய் பேசவேண்டியது பேசிப்போம்" என்று கூற அதற்கு சம்மதம் தெரிவித்தான் அருள்.

நாட்கள் கடந்தன....
அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருந்த அருளை அவன் நண்பன் அனிருத் தொடர்பு கொள்ள "மச்சி அந்த பொண்ணு அங்காலபரமேஸ்வரி கோவில் க்கு வந்துருக்கான் அதுவும் அவ தங்கச்சியோட வா போய் பார்த்துட்டு வந்திடுவோம்"

"டேய் இவ்வளவு இன்பார்மேஷன் எங்கிருந்து கலெக்ட் பன்ன"என்று அருள் வினவ

"டேய் இதெல்லாம் ஒரு விஷயமா வா வா கோவிலுக்கு போவோம்"என்றுரைக்க இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த கோவிலை நோக்கி புறப்பட்டனர். கோவில் பிரகாரத்தை சுற்றியவாறு தனது தங்கை வான்மதியுடன் பேசிக்கொண்டு இருந்த அவளை தூரத்தில் இருந்து நோக்கினான் அருள்..அவளது இனிமையான குரலும் அந்த எளிமையான தோற்றமும் அவனை மெதுவாக ஈர்த்தது. அனிதாவிடம் இருந்த அதே நேர்த்தியான தோற்றம் அவளிடம் இல்லை, இருந்தாலும்  அவளை பார்த்துக்கொண்டு இருக்க அவனிடம் ஏதோ ஒர் வித்தியாசமான காரணம் இருந்தது எனவே அவன் கண்கள் அவளை பார்க்க ஏங்கியது. கண்கொட்க முடியாது அவளையே பார்த்து கொண்டிருந்த அதே தருணம் அவளும் இவன் இருக்கும் திசையை எதிர்பாராத விதம் பார்க்க இருவரின் கண்களும் சந்தித்து கொண்டது. அவளை பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கோ நண்பனின் குரல் தட்டியெழுப்பியது.."மச்சி வந்தது வந்துட்டோம் வாயேன் ஒரு அர்ச்சனை பன்னிட்டு போய்டுவோம்"என்றுரைக்க.."டேய் அதுக்காடா நம்ப இங்கே வந்தோம் அந்த பொண்ணை இப்பதான் பார்க்க ஆரம்பித்தேன் அதுக்குள்ள ஏண்டா தொந்தரவு பன்ற "என்று அவனிடம் வாதாட அனிருத் சிரித்துவிட்டு "சரி சரி நீ உன் அர்ச்சனை தனியா பன்னிட்டு இரு..நான் போய் என் அர்ச்சனை தனியா பன்னிக்கிறேன் " என்று நக்கலடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்...
அனிருத்திடம் பேசிக்கொண்டு இருந்த அந்த ஒருசில நொடிகளிலில் அவள் காணவில்லை.."எங்க போயிட்டாங்க அவ்வளவு சீக்கிரம்"என்று யோசிக்க கோவில் வாசலில் ஏதோ சத்தம் கேட்க அங்கு ஓடிச்சென்று அருள் பார்க்கலானான்..
"ஹலோ மிஸ்டர் இங்க இருந்து மைலாப்பூர் போக அவ்வளவு காசு வாங்குவிங்களா? ம்ம்ம் நாங்க ஒன்னும் இந்த ஊருக்கு புதுசு இல்லை புரியுதா..எவ்வளவு கொடுக்கனும் னு எங்களுக்கு தெரியும்" என்று சத்தமாக கூச்சலிட்டபடியே இருந்த சம்யுக்தாவை வச்சக்கண் வாங்காமல் மீண்டும் பார்க்க துவங்கினான்.

நீ என் வாழ்வில் வந்த மாறுதல்Where stories live. Discover now