சூரியன் அஸ்தமிக்கும் நேரம் அது ,வானமெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு அழகு தேவதை போல சூரியன் மறைவிற்கு காத்துக்கிடந்தன,அந்த அழகான மாலைப்பொழுது துவங்க வீட்டில் அருளின் தாயார் பூஜையறையில் விளக்கேற்றியபடி வாயில் முருகன் துதியை பாடியபடி நின்றிருக்க....
அருள் வீட்டினுள் நுழைந்தான் அந்த நிசப்தமான நேரம் அருள் மெதுவாக எடுத்துவைத்த அடியை தாயால் உணரமுடிந்தது .பூஜையை முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைத்தவாறே "வா அருள் கண்ணா ,என்ன அதிசயம் எப்பவுமே சதா வேலை வேலை என தொங்கிக்கொண்டு இருப்பாயே இன்னைக்கு சீக்கிரமே ஆபிஸ்ல இருந்து வந்துவிட்டாய்"என கேட்க அவனோ தனது தாயினருகில் வந்து அமர்ந்தவன் "அம்மா இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு பங்கஷன் அதாவது டார்கெட் அச்சிவ் பன்னதுக்கு ஒரு சின்ன பார்ட்டி அதான் சீக்கிரமே எல்லாம் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துட்டேன்,ஆக்சுவலா இன்னைக்கு செகண்ட் சாட்டர்டே அதனால லீவு தான் அந்த பார்ட்டிக்கு போக வேண்டியதா போச்சு மத்தபடி வேலைனு எதுவும் இன்னைக்கு இல்லையே மா"என்று அவன் சொல்லி முடிக்க தனது மகனின் பேச்சில் மூழ்கியவர் கண்சிமிட்டாது அவனையே பார்த்துக்கொண்டிருக்க..
"அம்மா" என்று அவனது அழைப்பில் தெளிந்தவர் "சொல்லுடா கண்ணா" என்று கூற அவனோ "மா உன் கையால ஒரு காபி போட்டுக்குடு"என்று கேட்க சிரித்தவாறே "சரி டா இதோ போட்டுக்கொண்டு வரேன்"என்று எழுந்து சமையலறைக்கு சென்றாள்.
கையில் இரண்டு கோப்பையை ஏந்திக்கொண்டு முகப்பறையில் இருக்கும் மகனிடம் வந்து நீட்டியவாறு"அருள் இது ஸ்பெஷலா போட்ட காபி கும்பகோணம் டிகிரி காபி உனக்கு பிடிக்குமேனு பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி அவங்க ஊரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தாங்க காபி பொடி"என்றுரைக்க காபியை சுவைத்தவாறே "அம்மா எனக்கு பிடிக்குமேனு எல்லாத்தையும் இப்படி பார்த்து பார்த்து செய்றீங்க ஆனால் உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு கூட உங்களை இதுவரை கேட்டதே இல்லை ஐ யம் சாரி மாம்"என்று புன்னகையிக்க...

أنت تقرأ
நீ என் வாழ்வில் வந்த மாறுதல்
عاطفيةஇந்த கதை நாங்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கிய கதை. இந்த கதை ஓர் அழகான காதல் கதை .Romance genre