3

67 3 1
                                    

சம்யுக்தாவும் வான்மதியும் டாலி மாவுடன் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர் நுழைந்த உடனே அவர்களுடைய தந்தை சுப்ரமணியம் என்னமா டாலி மாவீட்டுல ஒரே அரட்டை தான் போல இருக்கு... என்று கூற சிரித்துக்கொண்டே சம்யுக்தாவும் வான்மதியும் தங்கள் அறையை நோக்கி செல்லும்போது தாய் மலர்விழி அவர்களை தடுத்து சம்யுக்தா என்றழைக்க என்னம்மா என்று திரும்பினாள் சம்யுக்தா.
"என்னடி கல்யாணத்தைப் பத்தி நீ எதுவுமே பேசாம இருக்க உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா இல்லையா என்று வினவினார் மலர்விழி"

இப்ப நான் பிடிக்காதுன்னு சொன்னா என்ன விட்டுடபோறியா என்ன இங்க பாருமா உங்களுக்கு பிடிச்சா எனக்கு பிடிச்ச மாதிரி தான் ஆனால் என்ன.. ஒரு வாட்டி நாம நேர்ல மாப்பிள்ளை யை பார்க்கனும் னு ஆசையா இருக்கு என்று கூற தந்தையோ உடனே சரிம்மா "நீ சொல்ற மாதிரி ஒருவாட்டி மாப்பிள்ளையை நம்ப நேர்ல சந்திச்சு பேசுவோம்."

"ஆஹா சும்மா ஏதோ விளையாட்டுக்கு சொன்னா உடனே நம்பிட்டாங்க..நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டோம்னு முடிவே பன்னிட்டாங்க"என்றது அவளுடைய மைண்ட் வாய்ஸ்

"ஹலோ அக்கா என்ன சும்மா சொல்லி பார்த்த ஆனால் உடனே கல்யாணத்துக்கு ஓகே ன்னு முடிவு பன்னிட்டாங்க என்று கேலி செய்ய"

"இல்லையே நெஜமாதான் நான் ஓகே சொன்னேன் .அதுல என்ன இருக்கு நம்ம அப்பா அம்மாவுக்குப் பிடிச்ச நமக்கு புடிச்ச மாதிரி தானே"

"அதெல்லாம் உனக்கு" எனக்கு அப்படி இல்லப்பா எனக்கு பிடிச்சா மட்டும்தான் நான் கல்யாணம் பன்னிப்பேன் என்றாள் வான்மதி.

"எம்மாடி நான் வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் எதையும் நினைக்க முடியாது அப்பா அம்மா சொல்றதை நான் கேட்டு தான் ஆகனும் என்றாள் சிரித்துக்கொண்டே."

"இதுக்கு தான் வீட்டுக்கு மூத்த பொண்ணா பொறக்க கூடாது என்கிறது என்றால் வான்மதி."

"என்ன பன்றது நீங்க எல்லாம் குடுத்து வைத்தவர்கள், விடுங்க மேடம் என்றாள் சம்யுக்தா" இவர்களின் உரையாடல் நீண்டு கொண்டே போக சரி சரி போய் உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க நானும் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்றார் தந்தை.

"ரெஸ்ட் எடுக்கிறது எல்லாம் நமக்கு கைவந்த கலை நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்க ரெஸ்ட் எடுக்க தான் போறோம் அப்பா" என்றாள் வான்மதி சிரித்துக்கொண்டே.

"ஆனாலும் உங்க இளைய பொண்ணுக்கு கொழுப்பு கொஞ்சநஞ்சம் இல்லைங்க என்றாள் வான்மதி."

"விடுடி இந்த வயசுல அப்படித்தான் இருப்பாங்க பசங்க இதுக்கெல்லாம் மனம் வருந்துவது..பசங்க இப்படி பேசினால் தான்டி வீடு கலகலன்னு இருக்கும் எப்ப பாரு உம்முனு உன்னை மாதிரி உம்முனா மூஞ்சியா இருந்தா எப்படி சொல்லு."

"இப்போ இந்த வம்புல என்னை ஏன் இழுக்கிறீர்கள் நான் தெரிஞ்சுக்கலாமா என்றால் மலர்விழி"

"ஆமா பின்ன என்ன கல்யாணம் ஆன புதுசில் இருந்து இன்னைக்கு வரைக்கும் என்னைக்காவது என்னிடம் கலகலனு பேசி இருக்கியா ?எப்ப பாரு இது பன்னுங்க அதை பன்னுங்க இது செஞ்சுட்டேன் அது செஞ்சுட்டேன், இதே தான் பேசிட்டு இருப்ப என்னமோ ஆபீஸ்ல வேலை செய்ற மாதிரி. எப்போவாது ஆசையா பாசமா பேசுவியா இல்ல பேச தான் உனக்கு நேரம் இருக்குமா.?என்றார் ஆதங்கத்துடன்

"சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நேரில் வரச்சொல்லி போன் பன்னி சொல்லிவிடுங்கள்."
.....
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் சந்திப்பு ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது இருவரும் சந்திக்க அதுவே எதார்த்தமான சூழ் நிலையாக இருக்கும் என்பதாலோ என்னவோ இப்படி ஒரு ஏற்பாடு.

"ஐ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க என்றாள் வான்மதி ஆனால் வலது புறம் திரும்பும் போது தான் தெரிந்தது தன்னுடன் படிக்கும் ஆகாஷும் உடன் வருகிறான் என்று"

"வணக்கம்...சம்மந்தி இவன் தான் என்னுடைய இளைய மகன்"

"ஓ...அப்படியா வணக்கம் தம்பி"என்று கூற ஆகாஷும் வணக்கம் வைத்துவிட்டு வான்மதியை பார்க்க.. இருவரின் கண்களும் சந்தித்து கொண்டது.

வழக்கம்போலான உரையாடல் நடந்துக்கொண்டிருக்க எதர்ச்சையாக அன்று சம்யுக்தா பணிபுரியும் கல்லூரியில் இருந்து சகமாணவர்கள் ஏதோ பிறந்தநாள் கொண்டாட வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் சம்யுக்தா அவர்களை அழைத்து தன் குடும்பத்தாருக்கும் அருள் குடும்பத்தினருக்கும் அறிமுகம் செய்து வைக்க அவளின் எதார்த்தமான செயல் அருளுக்கு பிடித்துபோக...அவளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள அவளின் எதார்த்தமான அனுகுமுறையும் ஒரு காரணமானது.

தொடரும்.

நீ என் வாழ்வில் வந்த மாறுதல்حيث تعيش القصص. اكتشف الآن