28 நீ... நான்...

2.7K 110 128
                                    

கண்ணு மண்ணு தெரியாமல் வண்டியை விட்ட ஆதித்.... ஒரு கட்டத்தில் பைக்கை எங்கையோ முட்ட போனவனை காக்கவே சரியாய் வந்தது அந்த அழைப்பு.... ச என சலித்தவாறு பைக்கை நிறுத்தியவன் ஃபோனை எடுத்தான்... அதில் ராஜேந்திரன் தாத்தா தான் அழைத்திருந்தார்....

ஆதித் : ஹலோ

ராஜேந்திரன் தாத்தா : ஆதித்தா...

ஆதித் : சொல்லுங்க... என்றதிலே.... " பேரன் கோவமா இருக்கான் டா சகோதரா " என்று அருகில் நாராயனன் தாத்தா மெதுவாய் குரல் கொடுக்க... உஷாராகி கொண்டனர்...

ராஜேந்திரன் : தம்பி ஒருவேலை இருக்கு... நீ வீட்டுக்கு கெளம்பி வர முடியுமா...

ஆதித் : என்ன வேலை... தாத்தா... என கோவத்தை அடக்கியவாறு பேசினான்....

ராஜேந்திரன் தாத்தா : நீ வா தம்பி... கொஞ்சம் முக்கியமான வேலை....

ஆதித் : வீட்டுக்கே வரவா...

ராஜேந்திரன் தாத்தா : ஆமா பா... வீட்டுக்கே வா...

ஆதித் : ம்ம் சரி தாத்தா... என ஃபோனை வைத்தவன்.... பிஸ்டலை பைக்கின் பக்கிலிருந்து எடுத்து விட்டு அதை முதுகில் மறைத்து வைத்தான்...

அறை சென்று வைக்காமல்... பைக்கிலே இருந்து எவராவது எடுத்தால் பிரச்சனையாகும் என எடுத்து மறைத்தே வைத்தான்...

பைக்கை உரும விட்டவன் நேரே வீட்டை நோக்கி புறப்பட.... அவன் வீட்டை நோக்கி செல்லும் போது சரியாக எதிரில் ரித்திக் பைக்கில் வந்தான்... இருவரின் பார்வைகளும் ஒருவரை ஒருவர் கோவமாய் சந்தித்து கொள்ள... ஊர் முடிவெடுக்கும் போது நம் சண்டைகளை வெளி காட்ட கூடாதென ஒருவரை ஒருவர் முறைத்தவாறே பைக்கை நிறுத்தி விட்டு வீட்டு தோட்டத்தில் அமர்ந்திருந்த பெரியவர்களினருகில் சென்று நின்றனர்...

அங்கு ஊரின் பெரிய தலைகள் அனைவரும் வந்திருந்தனர்.... பெரிய தாடி... கருகருவென இருந்த மீசை.... தோளில் போட்ட துண்டென அனைவரும் கம்பீரமாய் அமர்ந்து இருக்க... ஊரின் தலைவராய் நாராயனன் தாத்தாவும்... அவரருகில் ஜமீந்தார் சார்பாக ராஜேந்திரன் தாத்தாவும் அமர்ந்திருக்க... இருவரின் இரு பக்கத்திலும் ஜிம் பாடியாய் போய் நின்றனர் ஆதித்தும் ரித்திக்கும்...

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora