1

374 12 6
                                    

சம்பளம் பதினைந்தாயிரம், மதியம், இரவு இரண்டு நேரம் சாப்பாடு நாங்களே கொடுத்திடறோம். மாசத்துல
இரண்டு நாள் மட்டும் லீவ் எடுத்துக்கலாம் ஆனா சனி, ஞாயிறு கிழமைகள்ல எடுக்கக் கூடாது. விருப்பம்னா இரண்டு
நாள் வேலை செஞ்சுப் பாரும்மா... பிடிக்கலைனா இரண்டு நாளைக்கு உண்டான சம்பளத்தை வாங்கிட்டு
போய்டுங்க!!!
என்னனு.... யோசிச்சு சொல்லுமா என்றவரிடம்...

ஓகே சார் நான் நான் வீட்டில் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று நாற்காலியை விட்டு எழுந்தாள் தண்நிலா.

25 வயது நிறைந்தப் பெண் தண்நிலா. நிலா முகமும், வானவில்லின் வண்ணங்களும், எறும்பின் சுறுசுறுப்பும்
கொண்டு பம்பரமாய் சுழன்று கொண்டே இருப்பாள். மாம்பழத்திற்கு புகழ்பெற்ற மாநகராட்சியில் பிறந்த தண்நிலா
எப்பொழுதும் மதுரமாய் பேசி எளிதில் அனைவரையும் தன்வசப் படுத்திக் கொள்வாள். உதவி என்று கேட்குமுன்
மற்றவர்களுக்கு உதவுவாள்... வீட்டின் அடங்காத பிள்ளை.... மூத்தவள் வர்ஷா. மூத்தவளைப் பார்த்து வளந்தவள்
தண்நிலா... அவளின் குணங்களே இவளுக்குள்ளும் நிறைந்திருந்தது. படித்து முடித்து பட்டம் பெற்றாலும் அதனால் ஒரு
பிரையோஜனமும் இல்லை என்பது போல் சரியான வேலையும், சம்பளமும் இல்லாமல் திண்டாடிப் போனாள். சிறு
வயதிலிருந்தே வறுமையோடு போராடிதான் இன்று இந்த முடிவினை வெகு சுலபமாய் எடுத்துவிட்டாள். இருந்தாலும்
வீட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற எண்ணமும் மனதினை உறுத்தாமல் இல்லை.
நினைத்தது போலவே வீட்டில் பூகம்பமாய் பிரச்சனைக் கிளம்பியது..

என்ன ஆனாலும் சரி.. நீ இந்த வேலைக்குப் போகவே கூடாது என்றார் நிலாவின் தாயார்.

அம்மா!! இதுல தப்பு என்ன இருக்கு....

அதெப்படி டி ஒரு பொண்ண ஹோட்டல்க்கு வேலைக்கு அனுப்புவோம்?

நீ ஏன்மா ஹோட்டல்னு யோசிக்கிற.. வேலை செய்ற இடமா பாரு... அதும் கேசியர் வொர்க் தானே.. இதுல கஷ்டம்
என்ன இருக்கு? இதுக்கு முன்னாடி ஊருலயே பெரிய ஸ்கூல்ல தான் வொர்க் பண்ணேன், சம்பளம் எவ்வளோ
கொடுத்தான்?? 9000 ஆயிரம் தானே.. இப்போ இங்க 15 சொல்லியிருக்காங்க.. ஸ்கூல்ல மாடு மாதிரி இரண்டு
வருஷமா வேலை செஞ்சேன்.. பட் என்ன பண்ணான்ங்க.. நிலா இல்லாம வேலையே நடக்காதுனு வீண் பெருமைய
பேசுனாங்களே தவிர சம்பளம் ஏதாவது ஏத்தி போட்டானா?? இங்க அப்படி இல்லம்மா.. வொர்க் டென்சன் கம்மி..
சம்பளமும் கொஞ்சம் அதிகம்... இங்க போனாதான் கொஞ்சம் ஆச்சு சம்பளம் மிச்சம் பிடிச்சு கல்யாணத்துக்கு நகைய
சேர்க்க முடியும்.

எல்லாம் சரிதான்.. ஆனால் பாக்குறவங்க என்ன பேசுவாங்க... பொம்பள பிள்ளைய ஹோட்டல் வேலைக்கு
அனுப்புறாங்கனு சொல்ல மாட்டாங்க..

ம்மா.... பார்க்குறவங்க பார்த்துட்டேதான் இருப்பாங்க, பேசுவறவங்க பேசிட்டேதான் இருப்பாங்க.. அவங்களுக்காக
நாம வாழலை... ஹோட்டல் ஹோட்டல்னு சொல்லாதேம்மா.. ரெஸ்டாரன்ட்னு சொல்லு.

ஆமா.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...

எனக்கும் கஷ்டம் தான் ம்மா.. ஆனால் என்ன பண்ண? பணம் இல்லாம எவ்ளோ அவமானப் படுறோம்... அக்காக்கு
நல்லவரா கிடைச்சு கல்யாணம் பண்ணிட்டோம், ஆனா என்ன பொண்ணு பார்க்க வந்தவன் பத்து பவுன் வேணும்னு
முடிவாக இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு போனான்ல... அக்காவும், மாமாவும் என்னதான் எனக்காக நகை
போடுறேன்னு சொன்னாலும் அதை ஏத்துக்க முடியுமா?? நாமதானே அவளுக்கு செய்யனும்.. இதையெல்லாம்
யோசிச்சு தான் நான் முடிவெடுத்திருக்கேன்.. எல்லாம் சரியா வரும் நீ சரின்னு சொல்லும்மா..

ஏங்க.. நாங்க இரண்டு பேரும் பேசிட்டே இருக்கோம்.. நீங்க சும்மாவே இருக்கீங்க..

அம்மா.. நான் அப்பாவ எப்பவோ சமாதானம் பண்ணிட்டேன். ஸோ அப்பா இப்போ என் கட்சி.
ஒரு வழியாக வயதான தன் அப்பவையும் அம்மவையும் சமாதானம் செய்து அதே வேலையிலும் சேர்ந்தாள் நிலா.

முதல் நாள்.
ரெஸ்டாரென்ட் –ல் நுழையும் போதே அவள் மனம் பதறியது. நாம் படித்த படிப்பு அவ்ளோதனா என்று. நிலா நீ
ஒருபோதும் இதை பற்றி இனி யோசிக்கக் கூடாது என்று மனதினுள் தனக்கு தானே தீர்மானம் எடுத்துக்கொண்டாள்.

பெண்ணாகிய நான்...Where stories live. Discover now