5

89 10 1
                                    

நாளில் பாதி யமுனாவுடன் கழிந்தது என்றாள், மாலை நேரம் மொழி தெரியாதவர்களுடன் கழிந்தது நிலாவிற்கு. இப்படியே சில நாட்கள் கழிய, வீட்டில் இருக்கும் நேரம் குறைந்தது போலவே உணர்ந்தாள். எனினும் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் தாய், தந்தை, தம்பியோடு நேரத்தை செலவிட்டாள். விடுமுறை நாட்கள் இல்லை என்றாலும் சோர்ந்து விடாமல் வேலைக்கு செல்ல முயன்றாள்.

என்னதான் முயற்சி செய்தாலும் உடம்பில் தெரியாத அசதி மனதில் தெரிய ஆரம்பித்தது. ஏதோ நீங்காத பாரத்தை சுமப்பதை போல உணர ஆரம்பித்தாள்.

நாட்கள் நகர நகர ஏதோ கடமைக்கு வாழ்வது போல ஆனது. போதாகுறைக்கு தினம் தினம் ஒரு கஷ்டமராவது நிலாவை கஷ்டப்பட வைக்காமல் இருக்க மாட்டர். படித்து விட்டு ஏன் இங்க இருக்கம்மா, வேற வேலை கிடைக்கவில்லையா?, படிச்சுட்டு இங்கலாம் வரக் கூடாதும்மா, பரவாயில்லையே ஹோட்டல் ஜாலியா தான் இருக்கும், வேலையே இருக்காதுல்ல... என ஏதாவது ஒன்றை ஒருவராவது கேட்டுவிடுவார்கள். இதில் எதும் இல்லையென்றால், நிச்சயம் ஒரு குடிமகனாவது வந்துவிடுவான்.
ரெஸ்டாரென்ட் முழுவதும் நாற்றம் குடலை புடுங்கும் அளவிற்கு...  அதுவும் இரவு நேரத்தில் வருவதால் இவளும் அந்த ஹிந்தி வெயிட்டருடன் சென்று நிற்கத்தான் வேண்டும் என்ற நிலைதான்.

தண்நிலாவின் நாட்கள் இப்படி வெறுமையாய் போய்க்கொண்டிருந்த போதுதான் சாப்பிட வருபவர்களில் பலர் தவறான உறவுகளை அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இன்று ஒருவருடன் வந்தால் நாளை வேறு ஒருவருடன் வருவது... அப்படி இல்லை என்றால் தன் குடும்பத்தாருடனே வருவது.. இப்படி.. ஆண், பெண் என இருவருமே தவறாக இருந்தனர். இதைப் பார்க்கும் போதெல்லாம் நிலாவின் மனசு அப்படியே அவர்களை பளார் பளார் என அடிக்க வேண்டும், அவர்கள் குடும்பத்தாருடன் வரும்போது, அவர்களின் துரோகத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று துடித்தது. பல நேரங்களில் இதை யமுனவிடமும் கூறியிருக்கிறாள்.

 யமுனாவும் என்னங்க பண்றது.. இதைலாம் நம்மாளால ஒன்னும் பண்ண முடியாது என்று சலித்துக் கொள்வாள்.  

பெண்ணாகிய நான்...Where stories live. Discover now