7

103 7 0
                                    

நைட் 10 மணி ஆச்சு இன்னும் வேலை முடியலை… புது புராஜெக்ட்னு மாசத்துல 20 நாள் இப்படியே கடுப்பேத்துறானுங்களே.. ...

டேய்… இன்னும் நீ வொர்க் முடிக்கலையா டா?

எங்கடா.. எரர் வந்துட்டே இருக்கு? க்ளைன்ட் வேற.. போன் அடிச்சிட்டே இருக்கான்..

நீ தள்ளு நான் பார்க்குறேன்.
ஐந்தே நிமிடம் எரரை க்கிளியர் செய்தான் தனா.

நீ மட்டும் எப்படிடா எல்லாத்தையும் முடிக்கிற?

டேய்.. சலிப்பு இல்லாம செஞ்சாலே போதும்.. எரர்லாம் ஒரு மேட்டரே இல்ல..

ம்.. 8 மணி நேரம் வேலைன்னா சலிப்பு வராது.. ஆனா எட்டு பத்து பனெண்டுனு போனா எப்படி??

எவ்ளோ ஆனா என்ன டா.. நம்ம வேலைய நமக்கு சாட்டிஸ்ஃபாக்சனா செய்யனுமில்ல..

சரி சரி.. நானும் இனி ட்ரை பன்றேன்.. இப்போ பசிக்குது வா கேன்டீன் போலாம்..

மச்சி.. நான் ஒரு கடை சொல்றேன் அங்க போலாம் சூப்பரா இருக்கும்..

என்னாடா.. நீ தனியா எந்த கடைக்கு போன.. சூப்பரா இருக்கும்னு வேற சொல்ற?

நீ வாடா சொல்றேன்..

ம்..சரி.. பட் பக்கமா இருந்தா சரி.. ரொம்ப பசிக்குது..

ம் ஓகேடா வா..

மதியம் எங்கு போனார்களோ அங்கயே அழைத்துச் சென்றான்..

இங்க தான்டா செம்மயா இருக்கும் புட்..

டேய் தனா..

என்ன மச்சீ…..

அந்த பொண்ண பார்க்கனூன்னு சொல்லியிருந்தா சப்பிட்டுடே வந்திருக்கலாமே டா..  சூப்பரா இருக்கும்னு இங்க கூட்டிட்டு வர.. எனக்கு ரொம்ப பசிக்குதுன்னு சொன்னேன்ல… இவனுங்க வேற ஒவ்வொரு ஆர்டருக்கும் 20 நிமிசம் ஆகும் அதுவரை அமைதியா வெயிட் பண்ணி எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்கனு வேற போஸ்டர் அடிச்சு ஒட்டிருப்பானுங்களே…

இல்லா மச்சி.. உனக்கு டேஸ்டா வாங்கிக் கொடுக்கனுன்னு தான்..

பெண்ணாகிய நான்...Where stories live. Discover now