2

186 10 2
                                    

முதல் நாளே அவள் கற்றது உணவருந்த வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பது பற்றியே!!என்ன இந்த வேலைக்கா நான் வந்தேன் என்று தன்னையே கடிந்து கொண்டாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

முதல் நாளே அவள் கற்றது உணவருந்த வருபவர்களிடம் ஆர்டர் எடுப்பது பற்றியே!!
என்ன இந்த வேலைக்கா நான் வந்தேன் என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

ரெஸ்டாரன்ட்
உரிமையாளரிடம் சென்று நான் கேஷியர் வேலைக்காக தானே வந்தேன், ஆனால் இங்கு...

கேஷியர் தானம்மா, ஆனால் இங்கு ஒரே வேலையில் அமர்ந்து விடக் கூடாது. எல்லருக்கும் எல்லம் தெரிந்திருக்க
வேண்டும். அத்தோடு இங்கு அனைத்தையும் பார்த்துகொள்ள சரியான ஆள் வேண்டும் என்பதால் கூறுகிறேன். எல்லம்
சரியாகிவிடும் என்றார்.

நிச்சயம் சரியாக வேண்டும். இல்லையெனில் இது போன்ற வேலைக்கு வருவோமா என்று தனக்குத் தானே
பேசிக்கொண்டாள்.
தனக்குத் தேவையான பொருட்களை வாங்க என்பதற்காக கூட கடை வீதிகளுக்கு செல்லாத நிலா இன்று உணவு
விடுதியில் வேலை என்று வந்து நின்று கொண்டிருக்கிறாள் என்பது ஆச்சரியம் தான்.

நாள் முழுவதும் என்ன ஆனாலும் சரி இந்த வேலையை விட்டு சென்று விடக் கூடாது என்று மட்டும் சொல்லிக்
கொண்டே இருந்தாள். தனக்கு முன் அங்கு இன்னொரு பெண் சேர்ந்திருக்கிறாள் என்று அறிந்தவள் கொஞ்சம்
நிம்மதியானாள். தான் மட்டும் பெண்ணாக இருப்போமோ? மற்றவர்கள் நம்மை எப்படி பார்ப்பார்கள் என் மிகவும்
பயந்திருந்தவளுக்கு இதிலாவது கடவுள் கொஞ்சம் கருணை காட்டியிருக்கிறாரே என்று சிரித்துக் கொண்டாள்.
ஆனால்
அதிலும் ஒரு சிக்கல் இருப்பது பிறகுதான் தெரிய வந்தது. நிலாவின் வேலை நேரமோ மதியம் 1-லிருந்து மாலை 4
வரையும் மீண்டும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிவரை என நிர்ணயித்தே வேலையில் சேர்ந்திருந்தாள்.
மற்றொரு பெண்ணிற்கோ பகல் நேர வேலையாக இருந்தது. அதனால் இரவு தனியே இருக்க வேண்டுமே என
பயந்தாள்.

பெண்ணாகிய நான்...Where stories live. Discover now