4

117 10 6
                                    

ஸ்கூல்ல ஒரு சின்ன பிராப்ளம். ஆக்ட்சுவலி ரீசெண்டா பேங்ளூர்ல நடந்த ஏர்-இந்தியா ஷோக்கு நாங்க ஸ்டூடென்ட்ஸ் கூட்டிட்டு போனோம், அங்க மொபைல் அலௌட் கிடையாது. இங்க இருந்து போகும் போதே ஸ்ட்ரிக்டா சொல்லிதான் கூட்டிட்டு போனோம், பட் அங்க ஒன்பதாவது படிக்குற பசங்க செல்போன் எடுத்துட்டு வந்தது இல்லாம, ஹோட்டல்ல தங்கியிருக்கும் போது ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வந்து குடிச்சிருகானுங்க. அதை ரௌண்ட்ஸ் போனப்போ கண்டுபிடிச்சு அடிச்சுட்டோம். ஸோ.. பிராப்ளம் பெரிசாகிடுச்சி. கொஞ்சம் பணக்கார பசங்க… எங்க பையனை நீங்க எப்டி அடிக்கலாம்,  உங்களுக்கு என்ன உரிமை இருக்கு, எங்க விருப்பத்தோடு தான் நாங்கள் செல்போன் கொடுத்து அனுப்பினோம், அதற்கு எப்படி நீங்கள் அடிக்கலாம் என்றனர். அப்போ ட்ரிங்க்ஸ் பண்ணது என்னவாம்னு கேட்டா அது நீங்க ஸ்கூல்ல ஒழுங்க பையனுக்கு சொல்லி தரலை அதனால தான் இப்படி பண்ணிட்டனுங்க.. என்ன இருந்தாலும் அடிச்சது தப்புதான்னு சொல்லி மெல கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டாங்க…

பொண்ணுங்களயும் கூட்டிட்டு போன நாங்க தனே அவங்களுக்கும் பொறுப்பு.. இப்படி பண்ற பசங்களை அடிக்காம வேற எண்ணங்க பன்றது? 

ம் அதுவும் சரிதான்... அவங்க பேரன்ட்ஸையும் சேர்த்து ரெண்டு அடி போட்றுக்கனும்...

அட ஏங்க நீங்க வேற.. இதுக்கே தான் இவ்வளவு பிரச்சனை.. மேனேஜ்மென்ட் எங்களுக்கு சப்போர்ட் பண்ணலை. பேரன்ட்ஸ் நல்ல ரிச்.. மீடியா அது இதுன்னு சொல்லி மிரட்டவும் எங்க மேனேஜ்மென்ட் பயந்து எங்க மேல ஆக்சன் எடுக்கறேன், சஸ்பென்ஸன் கொடுக்குறேன்னு சொன்னாங்க...  அதான், நீங்க என்னடா சஸ்பென்ஸன் கொடுக்குறீங்க நாங்களே போறோம்னு வெளிய வந்துட்டோம்...

ம்...

உடனடியா வேலையும் தேவைப்பட்டுச்சு.. அதான் யோசிக்காம இங்க சேர்ந்துட்டேன்.

ம்.. பரவாயில்லை... எல்லாருக்கும் வீட்டு பிரச்சனை தான் அதானால தானே டைம் எடுத்து யோசிக்க கூட நேரமில்லாம  இப்படி வந்து ஜாயின் பண்றோம்.

பெண்ணாகிய நான்...Where stories live. Discover now