1

632 50 18
                                    

"அப்பா! இப்போ என்ன அவசரம்? எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றாள் செந்தனலழகி.

"அம்மாடி அப்படி சொல்லக்கூடாது டா. மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சாச்சி டா." என்றார் விநாயகம்.

"முடியாதுப்பா. என்னால உங்களை விட்டு போக முடியாது. எனக்கு நீங்க உங்களுக்கு நான் அவ்ளோ தான்." என்றாள் செந்தனலழகி.

"தனல்! அப்பாக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேணும்டா." என்றார்.

"எனக்கு யாரும் வேணாம்பா. அம்மாவை நீங்க எவ்ளோ விரும்புனிங்க? அம்மா இறந்தப்புறம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்ளோ பேர் சொன்னாங்க. எனக்கு என் பொண்ணு போதும்னு நீங்க தான சொன்னிங்க?" என்றாள் சிறுகுழந்தை போல்.

"அம்மாடி" என்றார்.

"என்னை அம்மா போனதுக்கு அப்புறம் கண்ணுக்குள்ள வச்சி தாங்குறிங்க. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடாம என்னையே உங்க வாழ்க்கையா மாத்திக்கிட்டிங்க. உங்களை போல ஒரு அப்பா யாருக்கு கிடைப்பாங்க? இல்ல உங்களை போல ஒருத்தன் எனக்கு கிடைக்கமாட்டான் பா." என்றாள்.

"டேய்! இப்பவும் என் வாழ்க்கை நீ தான்டா. நீ சந்தோஷமா வாழறதுல தான் என் சந்தோஷமே இருக்கு." என்றார்.

"நீங்க எவ்ளோ சொன்னாலும் நான் உங்கக்கூட தான் இருப்பேன்" என்றாள் தீர்மானமாக.

"அப்போ சரி. உங்க அத்தை வரா. நீயே உன் முடிவை அவகிட்ட சொல்லிடு" என்றார்.

"அத்தையா? எதுக்கு வராங்க? நான் எதுக்கு அவங்ககிட்ட சொல்லணும்?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"பின்ன இந்த வரனை பார்த்ததே அவ தான?" என்று சிரித்தார்.

"அவங்களா?" என்றாள் திகைப்பாய்.

"வேற யாரு என் குட்டிமாக்கு வரன் பார்க்க முடியும்? நானே தான். எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு" என்றாள் அவளின் அத்தை ஜானு வீட்டினுள் நுழைந்தபடி.

"அத்தை!" என்று துள்ளி குதித்து ஓடியவள் அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

என் வாழ்க்கையின் வசந்தமலரே (சிறுகதை)Dove le storie prendono vita. Scoprilo ora