சுரங்கம் 6

245 12 1
                                    


மதியின் வீட்டில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது மாப்பிள்ளை வீட்டில் பேசி காம்பெடிஷன் முடிந்த பின் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இப்போது நிச்சயதார்த்தம் மட்டும் வைத்திருந்தனர் மதி அவளது பேன்ட் மெம்பர்ஸ் அனைவரையும் அழைத்திருந்தாள்

அத்தோடு இந்தக் காம்படிஷன் மூலமாக நண்பர்களான சிலரையும் அழைத்து இருந்தாள் அதில் நேஹாவும் அடக்கம்

அனைவரும் நிச்சயதார்த்தத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தனர் நேஹா இறுதியாக வந்து சேர்ந்தாள்

அவள் மண்டபத்தின் உள் நுழைய போகும் போது மண்டப வாசலின் அருகே லியான் யாருடனோ பைசி கொண்டிருப்பதை பார்த்து அவனை நௌக்கி சென்றாள்

"ஹாய் லி"

"ஒ ஹாய் இப்பதான் வந்தீங்களா "

"ஆமா இப்ப தான் வந்தேன் எத்தன தடவ தான் உனக்கு சொல்றது லீ இப்டி பெரியவங்கட்ட பேசுற மாதுரி பேசாதேனு சில சமயம் நல்லா பேசுறல அப்புறம் ஏன்"

"ஹாய் மிஸ் நேஹா டீவில பாக்குறத விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று அவ்வளவு நேரம் லீயின் அருகே நின்றிருந்த பெண் சொல்ல

"தேங்க்யூ" என்று நேஹாவும் அவளை பார்த்தாள்

"என்ன என்ன யாருன்னு பாக்கறீங்களா நானும் இவன் இன்ரோ பண்ணுவான் பண்ணுவான்னு பார்க்கிறேன் என் பக்கமே திரும்ப மாட்டேகுறான் சோ நானே என்னை இன்ரோ பண்ணிக்கிறேன் என்னோட பேரு வித்யா உங்கள் லீயோட லவ்வர்" என்று அறிமுகபடுத்த

நேஹா அதிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கண்களிலும் மெலிதாக அதிர்வு தெரிந்ததோ என்று யோசிக்கும் போதே அவன் அந்தப் பெண்ணின் தலையில் கொட்டி "இன்னும் கொஞ்ச நேரமும் போச்சுன்னா நானே அறிமுகப்படுத்தி இருப்பேன்"என்று சொல்ல அந்த வார்த்தை அவள் சந்தேகத்தை விரட்டியடித்தது

"என்னடா நேஹா முழிக்கிறத பார்த்தா நீ என்ன பத்தி ஒரு வார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை போல நான் உனக்கெல்லாம் போய் லவ்வரா இருக்க ஒத்துக்கிட்டேன் பாரு என்ன சொல்லணும்"

இ(தய)சை சுரங்கம்Where stories live. Discover now