அவள் போனதற்கு தன்னை காரணமாய்க் கூறியும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கையை கட்டிக்கொண்டு பால்கனி கதவில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்திருந்தான்"இப்போ நான் திரும்பி திடீர்னு வந்ததுக்கு காரணமும் நீதான் இன்னைக்கு நான் உன்னோட ஒன் டே வேக் லவ்வர பார்த்தேன்"
"யாரு வித்தியாவா"
"ம் ஆமா"
"இதுக்கும் நீ போறதுக்கு என்ன சம்பந்தம்"
"என்ன சம்பந்தமா அன்னிக்கு அந்த பொண்ணு அவளை உன்னோட லவ்வர்னு சொல்லும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா இவ்வளவு மாசம் எப்படி போச்சுனு கூட எனக்கு தெரியல ஆனா இன்னைக்கு அந்த பொண்ண அவளோட லவ்வர் கூட பார்த்தேன் அப்படியே மனசுல லேஸ் ஆயிடுச்சு அதான் உன்ன பாக்க ஓடி வந்துட்டேன்"
அவன் பதில் எதுவும் பேசவில்லை என்றாலும் இவள் ஏதோ மோன நிலையில் இருப்பது போல் சந்தோஷத்தில் அவனிடம் அனைத்தையும் கூறிக் கொண்டே இருந்தாள்
"நான் உன்னை முதல் முதல்ல ஸ்கூல் படிக்கும் போது ஒரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன் பார்க்ல நீ கிட்டார் வாசிச்சுட்டு இருந்த அன்னைக்கு என்னோட மூடு எப்படி இருந்தது தெரியுமா என் அம்மா அப்பதான் என்ன விட்டு போய் இருந்தாங்க அன்னைக்கு உன்னோட இசைதான் என்ன ரிலாக்ஸ் பண்ணுச்சு"
"அதுக்கப்புறம் உன்ன ஒரு ஹோட்டல்ல பார்த்தேன் அப்போ உன்னோட சிஸ்டர் பர்த்டேனு நினைக்கிறேன் அங்கே நீ பாட்டு பாடுன கேக் சாப்ட்ட அப்போ நான் உன்னை தான் பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா"
"அதுக்கப்புறம் மழைல ஒரு நாள் பார்ல்தேன் இப்படி ஒவ்வொரு இடத்திலேயும் பார்த்துட்டு தான் இருந்தேன் ஏனோ உன்ன பாத்துட்டே இருக்கணும் தோணுச்சு அப்பா கூட சொன்னாங்க என் பாத்துட்டே மட்டும் இருக்க பேசுனு அப்பதான் எனக்கு பேசணும்னு தோணுச்சு நான் எதிர்பார்க்கவே இல்ல நீ நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ணுவேன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா"
DU LIEST GERADE
இ(தய)சை சுரங்கம்
Fantasyஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் காதல் கதை வேற எதுவும் போடனும் னா நீங்கதான் கமேட்ல சொல்லனும்