சுரங்கம் 1

798 17 1
                                    

இரவு நேரம் பத்தை தாண்டியிருந்தது வெளியே ஜோ என மழை பொழிந்து கொண்டிருந்தது அந்த மழை தூவல்களின் நடுவே இரண்டு கண்களும் மின்ன நீல நிற ஆடி கார் சறுக்கிக் கொண்டு போனது

அது இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ள கோவாவின் ஒரு கிளை சாலை

அந்தக் காரின் பின் இருக்கையில் அதிநாகரீக யுவதி ஒருத்தி அமர்ந்திருந்தாள் பசும்பாலில் குங்குமப்பூ கலந்தது போல் நிறம் அவள் அணிந்திருந்த ஆடையும் அவளின் காருக்கு பொருத்தமாக நீல நிறத்தில் கைகள் இல்லாமல் முழங்காலுக்கு மேலாக முடிந்து கண்ணை கவரும் விதமாக இருந்தது

வெளியே பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு வந்தவளின் கண்கள் காதில் ஒலித்த இசையின் காரணமாய் தன் கைபை பக்கம் திரும்பியது

அவளது வெண் பஞ்சு கைகள் கைபைக்குள் நுழைந்து சிறிது நொடிகளில் கைப்பேசியை எடுத்தது

அதன் திரையில் டாடி காலிங் என்று வந்ததை கண்கள் பார்த்ததும் அவளது ஸ்டிராபெரி இதழ்களில் இருந்த மென்னகை புன்னகை ஆனது

"டாடி இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் வீட்ல இருப்பேன் டோன்ட் வொரி"

"சரி பேபி மழை வேறு பெய்து அதான் கால் பண்னேன்" என்று கூறி அந்தப் பக்கம் நிசப்தமானது

கைப்பேசியை கைப்பையில் வைத்து விட்டு திரும்பியவளின் பார்வையில் தன் கார் செல்லும் திசையில் சற்று முன்பாக ரோட்டின் ஓரத்தில் ஐந்தாறு சிறுவர்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது

தொலைவிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டு சென்ற அவளின் கண்கள் அவர்கள் அருகே கார் கடக்கும்போது விரிந்தது 'இது அவன் தானே' என்ற மனதின் கேள்வியுடன் அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரைக்கும் அவனையே பார்த்துக்கொண்டு வந்தாள்

அவன் கண்ணில் இருந்து மறைந்ததும் இதன் முன் அவனைப் பார்த்த நினைவு அவள் மனக்கண் முன் வந்தது

இ(தய)சை சுரங்கம்Tempat cerita menjadi hidup. Temukan sekarang